கோடி கோடியாக ஊழல் செய்த திமுக எம்எல்ஏ என் குடும்பத்தை பற்றி பேச அருகதையே இல்லை : அதிமுக எம்எல்ஏ பரபரப்பு குற்றச்சாட்டு!!

Author: Udayachandran RadhaKrishnan
2 June 2022, 7:05 pm

புதுச்சேரி : கடந்த கால ஆட்சியின் போது கோடி கணக்கில் ஊழல் செய்த திமுக சட்டமன்ற உறுப்பினர் மீது தற்போதுள்ள அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் வலியுறுத்தியுள்ளார்

புதுச்சேரி அதிமுக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன், புதுச்சேரியில் கடந்த கால திமுக காங்கிரஸ் ஆட்சியின் போது பிப்டிக்கின் வாரியத்தின் தலைவராக இருந்த திமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்த தற்போதைய எதர்கட்சி தலைவர் சிவா, கோடிகணக்கில் ஊழல் செய்துள்ளதாகவும், கடந்த கால திமுக காங்கிரசின் ஊழல்கள் குறித்து விசாரணை நடத்த தற்போதுள்ள அரசு உத்தரவிட வேண்டும் என அன்பழகன் தெரிவித்துள்ளார்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் தனது சொந்த தொகுயை விட்டு வேறு தொகுதியில் போட்டியிட்ட எதர்கட்சி தலைவர் தன்னை பற்றியும் தனது குடும்பத்தை பற்றியும் பேசுவதற்கு எவ்வித அருகதையும் இல்லை என தெரிவித்தார்.

  • sai abhyankkar is the music director for allu arjun atlee project அட்லீ-அல்லு அர்ஜுன் படத்துக்கு இவர்தான் மியூசிக்கா? பிளாஸ்ட்டா இருக்கே!