அமைச்சர் காந்தியை அவமரியாதை செய்த திமுக எம்எல்ஏக்கள்? பள்ளி மாணவர்களும் அலைக்கழிப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
10 September 2024, 2:29 pm

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட அலுவலக வளாகத்தில் தமிழக முதலமைச்சர் கோப்பைக்கான ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட பல்வேறு தடகள போட்டிகள் துவக்க விழா நடைபெற்றது.

இதில் அமைச்சர் காந்தி ஆட்சியர் சங்கர் ஆகியோர் எம்எல்ஏக்கள் வருகைக்காக வெயிலில் காத்திருந்தனர்.

திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் சந்திரன் திருவள்ளூர் எம் எல் ஏ வி ஜி ராஜேந்திரன் ஆகியோர் போட்டியை துவங்கி வைக்க கால தாமதமாக வந்ததால் வெயிலில் ஆட்சியருடன் அமைச்சர் காத்திருந்தார்.

போட்டியில் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்க வந்த மாணவ மாணவியர்களும் வெயிலில் காத்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!