திமுக கரை வேட்டி கட்டிக்கிட்டு பொட்டு வைக்காதீங்க.. யாரு சங்கினே தெரியாது : சர்ச்சை கிளப்பிய ஆ. ராசா!
Author: Udayachandran RadhaKrishnan2 April 2025, 1:14 pm
நீலகிரி மாவட்டம் உதகையில் திமுக கழக மாணவர் அணி செயலாளர்கள் மற்றும் துணைச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதையும் படியுங்க: சொன்னதை செய்த அண்ணாமலை.. மேலிடம் கொடுத்த ஜாக்பாட் : 9ஆம் தேதி முக்கிய அறிவிப்பு!
இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திமுக கழக துணை பொது செயலாளர் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா பேசுகையில், திமுக மாணவர் அணி உறுப்பினர்கள் கடவுளை கும்பிடுங்கள், பொட்டு வைத்துக் கொள்ளுங்கள், ஆனால் திமுக கூட்டத்திற்கு வரும்பொழுது பொட்டுக்களை அழித்து விடுங்கள்.

ஏனென்றால் நீங்களும் பொட்டு வைத்து கயிறு கட்டுகிறீர்கள் அதேபோன்று சங்கிகளும் இதை தான் செய்கிறார்கள். இதனால் உங்களுக்கும் அவர்களுக்கும் வித்தியாசம் இன்றி போய் விடும் என்று பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.