CBI ரெய்டு குறித்து அலர்ட் செய்த திமுக எம்பி ஆ.ராசா.. அண்ணாமலை வெளியிட்ட 5வது ஆடியோ!

Author: Udayachandran RadhaKrishnan
7 March 2024, 9:28 pm

CBI ரெய்டு குறித்து அலர்ட் செய்த திமுக எம்பி ஆ.ராசா.. அண்ணாமலை வெளியிட்ட 5வது ஆடியோ!

திமுக நிர்வாகிகளுக்கு சொந்தமான சொத்துகளின் பட்டியல், ஊழல், மற்றும் முறைகேடு உள்ளிட்டவை குறித்த தகவல்களை திமுக பைல்ஸ் என்ற பெயரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டு வருகிறார்.

அதன் ஒருபகுதியாக திமுக பைல்ஸ் 3-ஆம் பாகத்தில் எம்.பி. ஆ.ராசா மற்றும் முன்னாள் உளவுத்துறை உயர் அதிகாரி ஜாபர் சேட் ஆகியோர் தொலைபேசியில் உரையாடியதாக 5-வது ஆடியோவை தற்போது வெளியிட்டுள்ளார்.

அதில், தமிழ்நாடு முழுவதும் தனக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற இருக்கிறது. பெரம்பலூரை சேர்ந்த நண்பருக்கு ரெய்டு குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும்.

ஆனால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. வேறு தொலைபேசி எண் இருந்தால் கொடுங்கள் என ஜாபர் சேட்டிடம் ஆ.ராசா உதவி கேட்பது போல உரையாடல் இடம் பெற்றுள்ளது.

இந்த ஆடியோவை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மோசடியில் ஈடுபட்ட குற்றவாளிகள் சோதனை குறித்த தகவல்களை முன்கூட்டியே பெறுகிறார்கள் எனவும் இதில் மோசமான விஷயம் என்னவென்றால் சிபிஐ அதிகாரிகள் வருவதற்கு முன்பே ஆதாரங்களை வெளியேற்ற தயார் நிலையில் இருந்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி