திருமணம் செய்த உடனே குழந்தை பிறக்க வேண்டுமென்றால்… சர்ச்சையை கிளப்பிய திமுக எம்பி பேச்சு!
Author: Udayachandran RadhaKrishnan18 April 2025, 5:03 pm
தமிழக அரசின் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 261 பயனாளிகளுக்கு வீடு கட்டிக் கொள்வதற்கு அரசு ஆணையினை உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் வழங்கினார். நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் கல்யாணசுந்தரம் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.
இதையும் படியுங்க: விஜய் பங்கேற்ற இஃப்தார் நோன்பு.. சீமான் சொன்ன அதிரடி காரணம்!
இந்நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு பேசிய நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் கல்யாணசுந்தரம் எல்லாவற்றுக்கும் அவசரப்படக்கூடாது திருமணமாகி பத்து மாதத்திற்கு பிறகுதான் குழந்தை பிறக்கும்.

திருமண நாளே குழந்தை பிறக்க வேண்டும் என்றால் அது வேறு விதமாக தான் குழந்தை பிறக்கும் என்று பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
மேலும் அமைச்சர் பொன்முடி சர்ச்சை பேச்சு இன்னும் அடங்காத நிலையில் பொது மேடையில் அமைச்சர் முன்னிலையில் திமுக எம்.பி பேச்சு பலரை முகம் சுளிக்க வைத்தது. இந்த சர்ச்சைக்குரிய பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.