பாஜகவை எதிர்க்க இது மட்டும் பத்தாது… நமக்கு பெண்கள் தான் டார்கெட்… திமுக நிர்வாகிகளுக்கு கட்டளையிட்ட எம்பி கனிமொழி…!!!
Author: Babu Lakshmanan24 February 2024, 4:06 pm
பாஜக அரசு தமிழகத்துக்கு ஏற்படுத்தும் துரோகங்கள் குறித்து திண்ணை பிரச்சாரம் மட்டுமில்லாமல் தனி நபர் பிரச்சாரத்திலும் ஈடுபட வேண்டும் என திமுக நிர்வாகிகளுக்கு எம்பி கனிமொழி வேண்டுகோள் விடுத்தார்.
தூத்துக்குடி மாவட்ட திமுக மகளிர் அணி சார்பில் நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை கூட்டம் தூத்துக்குடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் நடைபெற்றது. இதில் மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் ஆயிரக்கணக்கான மகளிர் கலந்து கொண்டனர்.

இதில் திமுக துணை பொது செயலாளரும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமானகனிமொழி கருணாநிதி கலந்து கொண்டு, வரும் பாராளுமன்றத் தேர்தலில் மகளிர் அணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் எப்படி பணியாற்ற வேண்டும் என்பது குறித்து பேசினார்.
அப்போது, அரசின் மகளிருக்காக நிறைவேற்றப்பட்ட திட்டங்களை பட்டியலிட்ட கனிமொழி கருணாநிதி எம்பி, மீண்டும் மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தால் தமிழக அரசு மகளிருக்காக வழங்கப்படும் மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்த நிதி நெருக்கடி உருவாக்கும் சூழலை ஏற்படுத்தி விடுவார்கள் என்பதால், திமுக மகளிரணி திண்ணை பிரச்சாரம் மட்டும் இல்லாமல், தனி நபர் பிரச்சாரத்திலும் ஈடுபட வேண்டும் தங்களது உறவினர்களுடன் பேசும்போதும் அரசியல் பேசுங்கள் என வேண்டுகோள் விடுத்தார்.
இந்த நாட்டின் கைகளை உயர்த்துவது பெண்களாகிய உங்கள் கையில் தான் இருக்கிறது. எனவே, அத்தனை பேரும் ஒன்றாக இணைந்து பணியாற்ற வேண்டும். அப்போதுதான் நமது வாழ்க்கைத் தரம் மற்றும் பிள்ளைகளின் எதிர்காலம் உயரும், என எம்பி கனிமொழி பேசினார்.