தூத்துக்குடி ; மக்களை அடிமையாக வைத்திருக்க முடியும் என்று அதிகாரத்திலேயே இருக்கக்கூடியவர்கள் நினைக்கக் கூடியது புத்தகம் என்று தூத்துக்குடியின் 3வது புத்தகத் திருவிழா துவங்கி வைத்து எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் 3வது புத்தகத் திருவிழாவை திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி அவர்கள் தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து, புத்தகங்களின் சிறப்பு அம்சங்கள் குறித்து சிறப்புரையாற்றினார். புத்தகத் திருவிழாவில் லட்சக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் 3வது புத்தகத் திருவிழா 2022 இன்று (22/11/2022) முதல் 29-ந் தேதி வரை 8 நாட்கள் தூத்துக்குடி- எட்டயபுரம் சாலையில் உள்ள ஏ.வி.எம்.கமலவேல் மகாலில் தினமும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடக்கிறது. இதில் 70-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்படுகின்றன. புத்தகத் திருவிழாவில் தினமும் தமிழகத்தில் உள்ள சிறந்த எழுத்தாளர்கள், பேச்சாளர்களின் சொற்பொழிவுகள் நடைபெறுகின்றன. தினமும் பள்ளி மாணவர்களுக்கான கலை இலக்கிய போட்டிகள் நடத்தப்படுகின்றன. மேலும் தினமும் மாலை வேளையில் பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளும் நடக்கிறது.
இந்நிகழ்ச்சியில் கருணாநிதி எம்.பி பேசுகையில், புத்தகங்கள் என்பது இன்னொரு உலகம் படிக்க படிக்க பல உலகங்களை கொண்டு வந்து சேர்க்கக் கூடிய ஒன்றுதான் புத்தகம். புத்தகங்கள் நமது சிந்தனையை தூண்டும். அதிகாரத்தில் இருக்கக்கூடியவர்கள் தொடர்ந்து பயந்த விஷயங்கள் புத்தகங்கள் தான்.
அதற்காக புத்தகங்கள் தடை செய்யப்பட்டது, எழுத்தாளர்கள் தடை செய்யப்பட்டனர். சிறைக்கு அனுப்பப்பட்டனர். லைப்ரரி தீயிட்டு கொளுத்தப்பட்டது என்றார். இதன் மூலம் மக்களை அடிமையாக வைத்திருக்க முடியும் என்று அதிகாரத்திலேயே இருக்கக்கூடியவர்கள் நினைக்கக் கூடியது புத்தகம்.
எல்லாவற்றையும் தாண்டி மக்களை அடக்கி வைக்க முடியும் ஒடுக்கி வைக்க வேண்டும் என்று நினைத்த சமூகங்கள் அத்தனையும் முதலில் தாக்கியது புத்தகங்களின் எழுத்தாளர்களையும் சிந்தனையாளர்களையும் தான், அது இன்றும் நடந்து கொண்டிருக்கிறது. இன்றும் அதே நிலை உள்ளது. இதன் மூலம் புத்தகத்தின் வீரியத்தை நாம் புரிந்து கொள்ள முடியும். எந்த காலகட்டத்திலும், உறுதுணையாக உற்ற துணையாக, ஒரே துணையாக உண்மையான துணையாக இருக்கக்கூடியது புத்தகங்கள். அதனால், படியுங்கள் உங்களுடைய உலகை மிக விரித்ததாக எல்லாவற்றையும் கடந்ததாக மாற்றிக் கொள்ளுங்கள், என்றார்.
3வது புத்தகத் திருவிழாவில், திமுக தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன், தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், தூத்துக்குடி மாநகராட்சி துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ உட்படப் பலர் கலந்துகொண்டனர்.
படுதோல்வியடைந்த படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவான “சிக்கந்தர்” திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 30 ஆம்…
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. அனைத்து கட்சிகளும் பங்கேற்று ஒரு…
பிரம்மாண்ட படைப்பு அட்லீ அல்லு அர்ஜுனை வைத்து இயக்கவுள்ள திரைப்படத்தின் அதிகாரப்பூர்வை அறிவிப்பு வீடியோ ஒன்றைல் இன்று சன் பிக்சர்ஸ்…
தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…
தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…
This website uses cookies.