தேவையில்லாமல் மூக்கை நுழைக்கிறார் ஆளுநர்… இது தான் நம்முடைய அடையாளம் : திமுக எம்பி கனிமொழி பேச்சு!!

Author: Babu Lakshmanan
9 January 2023, 12:43 pm

நம்முடைய அடையாளம், பெருமை ஆகியவற்றில் மூக்கினை நுழைக்கும் வகையில் ஆளுநர் நடந்து கொண்டு இருப்பதாக திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி பாக்கியநாதன் விளை 6வது வார்டு பாகுதியில் திமுக சார்பில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் திருவிழாவினை திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி தொடங்கி வைத்தார். அங்கு வைக்கப்பட்டிருந்த பொங்கல் பாணையில் பச்சரி போட்டு மக்களோடு மக்களாக சேர்ந்து பொங்கலிட்டு, சமத்துவ பொங்கலை கொண்டாடினார்.

பின்னர், அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பள்ளி சிறுமிகளின் கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டு, பின்னர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அவர் பேசியதாவது:- ஒவ்வொரு பகுதிகளை சேர்ந்தவர்களுக்கும், ஒவ்வொரு மதத்தினரை சேர்ந்தவர்களுக்கும், ஒவ்வொரு பண்டிகைகள் இருந்தாலும் கூட நாம் அனைவரையும் தமிழர்களாக ஒன்றினைந்து கொண்டாடும் திருவிழா இந்த பொங்கல் திருவிழா ஒன்றுதான்.

தமிழ்நாட்டினை ஏன் தமிழ்நாடு என்கின்றீர்கள்..? தமிழகம் என்று கூற வேண்டியதுதானே என்று ஆளுநர் கூறியதாவது : இப்பொழுது நம்முடைய அடையாளம், பெருமை, கலாச்சாரம், பண்பாடு,வரலாறு ஆகியவற்றில் மூக்கினை நுழைக்கும் வகையில் இப்போது நடந்து கொண்டு இருக்கின்றார்கள் எனவே நாம் அனைவரும் பெருமையாக தமிழர்களாக கொண்டாடும் திருவிழா இந்த தமிழர் திருவிழா இந்த பொங்கல் திருவிழா.

இந்த பொங்கல் திருவிழாவில் எடுத்துகொள்ள வேண்டிய சூளுரை ஒன்று உள்ளது அது நமது நாட்டின் தமிழ்மொழி, தமிழின் அடையாளம், திறமை, பெருமை, செழிமை வரலாற்றின் அடிகளை பாதுகாப்போம் என்ற உறுதிமொழியை இந்த தை திருநாளில் எடுத்து கொள்வோம், என்று பேசினார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ