அவ்வளவு வருத்தமா இருந்தால் நல்ல தமிழ் ஆசிரியரை அனுப்பட்டுமா..? பிரதமரை கிண்டல் செய்த கனிமொழி..!!

Author: Babu Lakshmanan
1 April 2024, 4:29 pm

நல்ல தமிழ் ஆசிரியரை நாங்களே அனுப்புகிறோம், பிரதமர் மோடி தமிழ் கற்றுக்கொள்ளட்டும் என்று திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதி கிண்டலடித்துள்ளார்.

தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியின் இந்தியா கூட்டணி திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதி நேற்று கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி உட்பட்ட மந்திதோப்பு பகுதியில் மக்களை நேரடியாக சந்தித்துத் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வாக்குகளை சேகரித்தார்.

அப்போது, அவர் பேசியதாவது :- மோடி தமிழ் தெரியவில்லை என்று நாடகம் ஆடுகிறார். எனக்கு தமிழ் தெரியவில்லை என்று வருத்தமாய் இருக்கிறது என்று கூறியிருக்கிறார். தமிழ் தெரியவில்லை என்றால் ஏன் வருத்தப்பட வேண்டும். எங்களை எல்லாம் இந்தி கற்க சொல்றீங்க, நீங்க தமிழ் கத்துக்கோங்க! நாங்கள் ஒரு நல்ல ஆசிரியர் பார்த்து அனுப்பி வைக்கிறோம், இதற்கு ஏன் வருத்தம், என்று கிண்டல் அடித்தார்.

  • Anirudh is in love with the daughter of a famous businessman. பிரபல தொழிலதிபரின் மகளை காதலிக்கும் அனிருத்.? இவங்களுக்குள்ள இப்படி ஒரு கனெக்ஷனா?