திருச்சி ; நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மகளிர் மசோதா கண்துடைப்பு என்று திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
திமுக மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணியின் மாநில நிர்வாகிகள் அறிமுக கூட்டம் மாநில துணை பொதுச்செயலாளர் கனிமொழி தலைமையில் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மற்றும் மாநில நிர்வாகிகள் அனைத்து மாவட்ட புதிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கூறியதாவது :- மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். அதன் மதிப்பீட்டு அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்புச் செய்ய வேண்டும். அதன் பிறகு, தான் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிர்ணயிக்கப்படும் என அதுதான் மசோதாவில் சொல்லப்பட்டுள்ளது.
எப்போது கணக்கெடுப்பு தொடங்கும் தெரியவில்லை. எப்போது தொடங்கி எப்போது முடியும் என தெரியவில்லை. அது 10, 20, 30 ஆண்டுகள் ஆகலாம். அதற்கான கால நிர்ணயம் குறிப்பிடவில்லை. இந்த தேர்தலில் மசோதா வர வாய்ப்பு இல்லை. எந்த தேர்தலில் வரும் எனவும் தெரியவில்லை. இதுதான் உண்மை இது வெறும் கண்துடைப்பு.
தலைவர்களை கொச்சைப்படுத்துவது தொடர்ந்து அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். பாராளுமன்றத்துக்குள்ளேயே கொச்சையாக பேசியவர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தொடர்ந்து எதிர்க்கட்சிகள் மீது என்னென்ன அச்சுறுத்தல்களை காட்ட முடியுமா..? அதெல்லாம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
அதிமுக – பாஜக பிரிவிற்கு நான் கருத்து சொல்ல முடியாது. அது அவர்கள் சுயமரியாதைக்கு உட்பட்டது. கட்சியில் மகளிர்க்கு உரிய அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. மகளிருக்கு அதிக வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என கருத்திற்கு மாற்று கருத்து இல்லை, எனக் கூறினார்.
நாடாளுமன்றத்தில் காவிரியை குறித்து அதிகம் பேசவில்லை என்று கூறப்படுகிறது என்று கேள்விக்கு, “பாராளுமன்றமே மூன்று நாள் தான் நடைபெற்றது. பாராளுமன்றத்தில் பேசிவதற்கு எந்த வாய்ப்பு வழங்கப்படவில்லை,” என தெரிவித்தார்.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.