முதல்ல நலத்திட்டங்களுக்கும், இலவசங்களுக்கும் வித்தியாசத்த புரிஞ்சுக்கோங்க… மத்திய அரசுக்கு திமுக எம்.பி. கனிமொழி வலியுறுத்தல்!!

Author: Babu Lakshmanan
22 August 2022, 9:18 pm

சென்னை : நலத்திட்டங்களுக்கும் இலவசங்களுக்குமான வித்தியாசத்தை மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும் என்று தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

சென்னை ஆயிரம் விளக்கு பகுதி உள்ள எத்திராஜ் கல்லூரியில் மாணவர் யூனியன் துவக்க விழா நடைபெற்றது. இதில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

மேடையில் பேசிய அவர், கல்லூரி காலத்தில் தான் பல்வேறு விதமான மனிதர்களை சந்திக்க முடியும் என்றும், 33 சதவீத பெண்கள் இடஒதுக்கீடு மசோதா தான் அனைத்து இந்திய கட்சிகளும் ஏற்று கொள்ளும் மசோதா, ஆனால் அந்த மசோதா ஏன் நிறைவேற்ற முடியவில்லை என்பது தான் தெரியவில்லை, எனக் கூறினார்.

இன்று மாணவ பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாணவிகள் முக்கியமான
முடிவை எடுக்கும் இடத்தில் இருக்கிறீர்கள் என்றும், உங்களது முடிவுகளில் தயிரியமாக இருந்து முன்னெடுக்கும் போது, அது மற்ற இளைஞர்களுக்கும், பெண்களுக்கும் ஒரு வழியாக அமையும் என்றார்.

கல்லூரி காலம் உங்களுக்கு மனவலிமை ஏற்படுத்தும் ஒவ்வொரு முறை கீழே விழும் போதும் மேலும் வலுவுடன் நம்மால் எழ முடியும் எனக் கூறிய அவர், ஏதுவும் உங்களின் என்னங்களை தடுக்க முடியாது என்றும், வாழ் நாள் முழுவதும் இருக்கும் நண்பர்களை கல்லூரி உங்களுக்கும் அளிக்கும், என தெரிவித்தார்.

மேலும், கல்லூரியில் மாணவ பிரதிநிதிகளாக பணியாற்றுபவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்றும், நம்மை சுற்றி நடக்கும் அனைத்திலும் அரசியல் இருப்பதாகவும், அரசியல் பேசுங்கள் அரசியல் தெரிந்து கொள்ளுங்கள், என்றார்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்.பி. கனிமொழி, “எத்தனையோ நாட்கள் போராடி சட்டத்தைப் திரும்ப பெறக்கூடிய நிலையில் விவசாயிகள் இருக்கிறார்கள். அவர்களுடைய உணர்வுகளை புரிந்து கொண்டு கருத்துக்களையும், மக்களுடைய கருத்துக்களையும், எதிர்க்கட்சி கருத்துகளையும் கேட்க வேண்டும். அதை செவி கொடுத்து கேட்கவில்லை என்றால், எந்த விதத்தில் ஜனநாயகமாக இருக்க முடியும்.

நல திட்டங்களுக்கும் இலவசங்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது. அதை மத்திய புரிந்து கொள்ள வேண்டும். அடிப்படை தேவை உள்ள மக்களுக்கு பயன்படுத்தக்கூடிய விஷயங்களும், விவசாயிகளுக்கு இலவச மின்சாரமும், அரிசி இலவசமாகவும், கல்வி இலவசமாகவும் கொடுத்தால் அடித்தட்டு இருக்கக்கூடிய மக்களை முன்னேற்றுவதற்காக தான். அரசு என்பது மக்களுக்காக தவிர்த்து கார்ப்பரேட்டுக்கு அல்ல என்பதை உணர வேண்டும், என்று தெரிவித்தார்.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!