25 ஆண்டுகளானாலும் வாய்ப்பில்லை… பாஜக கொண்டு வந்த மகளிருக்கான 33% இடஒதுக்கீடு குறித்து திமுக எம்பி கனிமொழி கணிப்பு..!!
Author: Babu Lakshmanan2 October 2023, 6:59 pm
பாஜக கொண்டுவந்துள்ள மகளிர்காண 33 சதவீத இட ஒதுக்கீடு என்பது 25 ஆண்டு காலமானாலும் நடைமுறைப்படுத்த முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி விமர்சனம் செய்துள்ளார்.
இந்தியா கூட்டணியின் சார்பில் வருகின்ற 14 ஆம் தேதி மகளிர் மாநாடு சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், சிறு குறு, நடுத்தர தொழில் துறை அமைச்சர் தாமோ அன்பரசன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
இந்நிகழ்ச்சியின் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி செய்தியாளர்கள் சந்தித்தார். அப்போது, அவர் பேசியதாவது :- கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா கொண்டாட வகையிலும் பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா பற்றி பேசுவதற்காக இந்த நாட்டில் பெண்களுக்கு இருக்கக்கூடிய நிலைகளை குறித்து பேசுவதற்காக வருகின்ற அக்டோபர் மாதம் 14ஆம் தேதி இந்திய கூட்டணியில் இருக்கக்கூடிய முக்கியமான பெண் தலைவர்கள் இந்த மாநாட்டிலே கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
காங்கிரஸ் கட்சியின் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, தேசிய பாதுகாப்பு சுப்ரியா சுளே, திரிணாமுல் காங்கிரசில் மற்றும் பல்வேறு பெண் தலைவர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். மகளிர் உரிமை மாநாடு என்பதால் பெண் தலைவர்கள் மட்டுமே பங்கேற்க உள்ளார்கள். இதில் முதலமைச்சர் அவர்கள் மட்டும் கலந்து கொள்வார்கள்.
இந்திய கூட்டணி பொருத்தவரை முதலமைச்சர் அவர்களின் பங்களிப்பு என்பது மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. இந்த கூட்டம் இங்கு முதன்முதலாக நடைபெறுகிறது. நிச்சயமாக மிக பெரிய கவனத்தைப் பெறகூடிய கூட்டமாக இருக்கும். பாஜக இந்தியா என்ற பெயரை பாரத் என்று கூறிவரும் சூழ்நிலைகளில், அவர்கள் இதே போன்ற பல முயற்சிகளை செய்து கொண்டிருப்பதை மேலும் அச்சத்தை ஏற்படுத்து வருகின்றனர்.
சோனியா காந்தி முதலமைச்சர் நேரில் சந்திக்கும் வாய்ப்பு குறித்து முதலமைச்சர், சோனியா காந்தி அவர்கள் தான் முடிவு எடுக்க வேண்டும். நிச்சயமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
33% சதவிகித பெண்கள் இட ஒதுக்கீடு சட்டத்தை மட்டும் கொண்டு வந்துவிட்டு, அது என்று நடைமுறைக்கு வரும் என்று தெரியாத நிலையில் இருக்கிறது. இன்னும் 25 ஆண்டுகள் ஆனாலும் இதுக்கு அடுத்து வரும் பல தேர்தலுக்கு பிறகு கூட இது அமலுக்கு வருமா என்று சந்தேகமாக உள்ளது.
பாராளுமன்றத்தில் இருக்கக்கூடிய மற்ற கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களை எப்படி கொச்சைப்படுத்த வேண்டுமோ, அப்படி எல்லாம் செய்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் யார் அங்கு குரல் கொடுத்தாலும், அவர்களை பேசிவிடாமல் செய்கிறார்கள். அங்க இருக்கக்கூடிய ஒன்றிய அரசு எதையும் விவாதிக்க விடாமல் யாரையும் பேச முடியாது. சூழ்நிலை தான் அவர்கள் தொடர்ந்து செய்து வருகிறார்கள், ஆகவே வருகின்ற காலத்தில் நாடாளுமன்றத்தில் பாஜகவை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்பதே எங்களது நோக்கமாக இருக்கும், எனக் கூறினார்.