‘புலி பதப்படுத்தும் இயேசு குடோனா..?’ தமிழில் தடுமாறிய திமுக எம்.பி.: இது என்னடா, தமிழுக்கு வந்த சோதனை என கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்..!!

Author: Babu Lakshmanan
21 January 2023, 5:11 pm

திண்டுக்கல் : தமிழில் பிழையுடன் திமுக எம்பியின் பேஸ்புக் பதிவை சமூகவலைதளங்களில் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி திமுக சார்பில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தமிழக அளவில் பாராளுமன்ற தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர்.

இவர் வெள்ளிக்கிழமை அன்று நத்தம் சட்டமன்றத் தொகுதி சாணார்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கியின் நிதி உதவியுடன் ரூபாய் 85 லட்சம் மதிப்பில் புளி தட்டுதல், தரம் பிரித்தல், மற்றும் பேக்கேஜ் செய்தல் உள்ளிட்ட பணிக்கான புதிய (குடோன்) கட்டிட பூமி பூஜை விழாவில் கலந்துகொண்டு கட்டிடப் பணியை தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து எம்பி வேலுச்சாமி தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில் புளிக்கு பதிலாக புலி என்றும், ஏசி குடோன் என்பதற்கு பதிலாக இயேசு குடோன் என்றும், பதிவு செய்தது சமூக வலைதளங்களில் தற்போது வைரல் ஆகி வருகிறது.

தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கும் திமுகவில் இருந்து கொண்டு, நல்லா தமிழ் வளர்க்கிறீங்கப்பா, என்னடா இது தமிழுக்கு வந்த சோதனை, காட்டுப்புலி அல்ல வீட்டு புளி எனக்கூறி திமுக எம்.பி வேலுச்சாமி பதிவிட்ட பேஸ்புக் பதிவை சமூக வலைதளங்களில் அதிக அளவில் பகிர்ந்து வருகின்றனர்.

நெட்டிசன்களின் பதிவுகளால் தவறை உணர்ந்த திமுக எம்பி, அந்தப் பிழைகளை மீண்டும் அவர் சரிசெய்து பதிவிட்டார்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி