ஊழலில் சிக்கியுள்ள திமுக எம்பியால் நீலகிரி தொகுதி மக்களுக்கே தலைகுனிவு : மத்திய அமைச்சர் எல்.முருகன் விமர்சனம்!!

Author: Udayachandran RadhaKrishnan
11 October 2023, 9:50 pm

ஊழலில் சிக்கியுள்ள திமுக எம்பியால் நீலகிரி தொகுதி மக்களுக்கே தலைகுனிவு : மத்திய அமைச்சர் எல்.முருகன் விமர்சனம்!!

மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வள அமைச்சகம் மற்றும் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் இணை அமைச்சர் எல்.முருகன் அவர்களின் முகாம் அலுவலகம் இன்று திறக்கப்பட்டது.

2024 தேர்தலில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நீலகிரி பாராளுமன்றத்திற்கு போட்டியிடுகிறார் என கூறப்பட்டு வந்த நிலையில் அவர் ராஜ்யசபா உறுப்பினரான அவர் போட்டியிடுவது சந்தேகம் என சிலர் கூறிவந்தனர்

இந்த நிலையில் நீலகிரி மாவட்டம் உதகை குன்னூர் சாலையில் போக்குவரத்து வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகில்( பிரித்தி கிளாசிக் டவர் எதிர்புறம்) முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட மூத்த பாஜக நிர்வாகியுமான அய்யா மாஸ்டர் மாதன் அவர்களின் இல்லத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் அவர்களின் முகாம் அலுவலகம் இன்று திறப்புவிழா நடைபெற்றது.

மாவட்ட தலைவர் மோகன்ராஜ் தலைமையில் சிறப்பாக நடைபெற்ற முகாம் அலுவலக திறப்பு விழாவில் பாஜக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

முகாம் அலுவலக திறப்பிற்கு பின் செய்தியார்களிடம் பேசிய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வள அமைச்சகம் மற்றும் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் இணை அமைச்சர் எல்.முருகன் பிரதமரின் மகத்தான திட்டங்கள் மூலம் இந்த 9 ஆண்டுகளில் அனைத்து தரப்பு மக்களும் பெரும் பயன் பெற்றுள்ளனர்

அந்த மக்கள் நல திட்டங்களை மக்களுக்கு சிறப்பாக வழங்கவே இந்த முகாம் அலுவலகம் திறக்க பட்டு உள்ளது. ஊழலில் சிக்கி உள்ள இந்த தொகுதி பாராளுமன்ற உறுப்பினரால் தொகுதி மக்களுக்கு தலைகுணிவு ஏற்பட்டு உள்ளது.

அவரின் பினாமி சொத்துக்கள் தற்போது பறிமுதல் செய்யபட்டு உள்ளது இது அனைவருக்கும் பெரும் தலைகுனிவாகும் என பேசினார். பேட்டியின் போது மாவட்ட தலைவர் மோகன்ராஜ் உடன் இருந்தார்

  • Redin Kingsley and Sangeetha Announce Pregnantவீட்டுல விஷேசம்… குட்டி கிங்கிஸ்லி Coming Soon : வெளியான வீடியோ!
  • Views: - 1617

    0

    0