அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுக்கும் திமுக நகராட்சி தலைவர் : தகுதி நீக்கம் செய்ய கோரி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!!

Author: Udayachandran RadhaKrishnan
21 April 2023, 8:50 pm

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புஞ்சைபுளியம்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள சந்தை கடையில் கடந்த 50 ஆண்டுகளாக 13 மாட்டு இறைச்சி கடைகள் செயல்பட்டு வந்தன.

அந்த கடைகளை திமுக நகராட்சி தலைவர் மற்றும் துணை தலைவரின் தூண்டுதலின் பேரில் நகராட்சி நிர்வாகத்தினர் கடந்த டிசம்பர் 17ஆம் தேதி எந்த முன்னறிவிப்பும் இன்றி அகற்றி விட்டதாக கூறப்படுகிறது.

இந்த கடைகளை மீண்டும் அதே இடத்தில் செயல்பட அனுமதி அளிக்க வேண்டும் என மாட்டிறைச்சி விற்பனையாளர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்த நிலையில் கடந்த புஞ்சைபுளியம்பட்டி நகராட்சியில் கடந்த 13ஆம் தேதி நடைபெற்ற அவசர கூட்டத்தில் கடைகள் சந்தை கடையில் செயல்பட அனுமதி அளிக்கக்கூடாது என திமுகவை சேர்ந்த புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி தலைவர் ஜனார்த்தனன் மற்றும் துணைத் தலைவர் சிதம்பரம் ஆகியோர் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என தெரிவித்த போது இதில் பல்வேறு நெருக்கடிகள் உள்ளதால் இந்த தீர்மானத்தை செயல்படுத்த முடியாது என புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி ஆணையாளர் சையது உசேன் நடைபெற்றுக் கொண்டிருந்த கூட்டத்தில் இருந்து வெளியேறி அவரது அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த திமுக நகராட்சித் தலைவர் ஜனார்த்தனம் மற்றும் துணைத் தலைவர் சிதம்பரம் ஆகியோர் அவரது அலுவலகத்துக்குள் நுழைந்து அவரை தள்ளிவிட்டும் தகாத வார்த்தைகளில் பேசியும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதேபோன்று தொடர்ந்து புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி ஆணையாளர் சையத் உசேனை பணி செய்யவிடாமல் தொந்தரவு செய்து வருவதாகவும், உடனடியாக தமிழக அரசு தலையிட்டு புஞ்சை புளியம்பட்டி நகராட்சி தலைவர் ஜனார்த்தனன் மற்றும் துணைத் தலைவர் சிதம்பரம் ஆகியோரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனவும், ஆணையாளர் சையது உசேன் பணிபுரியும் நகராட்சி அலுவலகத்திற்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி இன்று தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அலுவலர்கள் சங்கத்தினர் புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி அலுவலகம் முன்பு திமுக நகராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர்களுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  • Bigg Boss Anshitha akbarsha Pregnant அன்ஷிதா 3 மாதம் கர்ப்பமா? பிக் பாஸ் வீட்டுக்குள் என்ன நடக்குது?!
  • Views: - 530

    3

    0