இந்தியாவை காப்பாற்ற திமுகவினர் தயாராக இருக்க வேண்டும் : முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு!!

Author: Udayachandran RadhaKrishnan
23 April 2023, 12:22 pm

திமுக மாநில விவசாய அணி துணைச் செயலாளர் நல்லசேதுபதி இல்லத் திருமண விழா இன்று நடைபெற்றது. இந்த திருமண விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:- இந்தியாவைக் காப்பாற்ற திமுகவினர் அனைவரும் தயாராக வேண்டும். நாட்டை காப்பாற்ற தேர்தலுக்கான பணிகளை விரைந்து செய்ய வேண்டும்.

நாடாளுமன்ற தேர்தலில் அகில இந்திய அளவில் வெற்றி பெற்றாக வேண்டும். மத்திய அரசு தேவையான உதவிகளை வழங்காமல் இருந்தாலும் சிறந்த மாநிலமாக வளர்ந்துள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 352

    0

    0