திமுக முன்பு போல இல்லை.. VITAMIN M இருந்தால்தான் மதிப்பு.. அதிமுகவில் இணைந்த சிம்லா முத்துச்சோழன் குற்றச்சாட்டு!!
மறைந்த திமுக துணை பொதுச் செயலாளர் சற்குண பாண்டியன் அம்மையாரின் மருமகளும், 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் ஆர் கே நகர் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டவருமான சிம்லா முத்துச்சோழன், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்துக்கொண்டார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2002 முதல் திமுகவில் இருந்து வருகிறேன். திமுகவில் பல பொறுப்புகள் எனக்கு வழங்கப்பட்டன. 2016 ல் எனக்கு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளித்தனர் .
அதற்கு அடுத்த ஆண்டு நடைபெற்ற இடைத் தேர்தலில் போட்டியிட எனக்கு வாய்பு தரவில்லை , அடுத்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தருவதாக திமுக தலைவர் எனக்கு வாக்குறுதி தந்தார் , ஆனால் அதை இன்று வரை அவர் நிறைவேற்றவில்லை.
கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகம் முழுதும் 6 நாள் இருசக்கர வாகன பேரணி ஏற்பாடு செய்தேன். ஆனால் என்னை அனுமதிக்கவில்லை. அதே இருசக்கர பேரணியை 4 மாதம் கழித்து இளைஞர் அணி செயலாளர் உதயநிதி மூலம் செய்தனர். திமுக ஆளுங்கட்சியாக இருப்பதால் மட்டுமே விருப்பமின்றி பலர் பல்லை கடித்து கொண்டு திமுகவில் உள்ளனர்.
என்னால் இதற்கு மேல் இருக்க முடியாது. அதனால் அதிமுக வந்துவிட்டேன். கருணாநிதி இருந்தபோது திமுக அரசியல் வேறு மாதிரி இருந்தது, இப்போது வேறுமாதிரி இருக்கிறது. திமுகவில் Vitamin m இருந்தால்தான் அங்கீகாரம் தருகின்றனர் என கூறியுள்ளார்.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.