உள்ளாட்சி தேர்தலில் திமுக இரட்டை வேடம் போடுகிறது : திமுக மீது அதிமுக நிர்வாகி அன்பழகன் பாய்ச்சல்

Author: kavin kumar
20 February 2022, 4:31 pm

புதுச்சேரி : புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தலை நடத்த விடாமல் திமுக சதி செய்து வருவதாகவும், உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வலியுறுத்தி மாநில தேர்தல் ஆணையரிடம் அதிமுக சார்பில் மனு அளிக்கப்படும் என அதிமுக கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில்,”புதுச்சேரி மாநிலத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலை தடுத்து நிறுத்த திமுக தொடர்ந்து சதி செய்து வருவதாகவும், உள்ளாட்சி தேர்தலை நிறுத்த வேண்டும் என்பதற்காக மாநில தேர்தல் ஆணையர் மீது தேவையற்ற குறைகளை திமுக கூறி வருவதாகவும், தமிழகத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அளிக்காத நிலையில்,

புதுச்சேரியில் மட்டும் இட ஒதுக்கீட்டு வழங்கி உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என கூறி திமுக தொடர்ந்து இரட்டை வேடம் போட்டு வருவதாக தெரிவித்த அன்பழகன், புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் நடத்தும் பணிகளை அரசு உடனே எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். மேலும் மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த கோரி மாநில தேர்தல் ஆணையரிடம் அதிமுக சார்பில் மனு அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

  • again ajith join with adhik ravichandran in ak 64AK 64- திரும்பவும் ஆதிக் ரவிச்சந்திரனோடயா? குட் பேட் அக்லி படத்தில் இடம்பெற்ற Hint!