பட்டா போடப்பட்ட நாற்காலிகள்: மேடை நாகரீகம் இல்லாத திமுக மேடை: உயரதிகாரிகளுக்கு நேர்ந்த துயரம்….!!

Author: Sudha
10 August 2024, 4:55 pm

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலைக் கல்லூரியில் நேற்று திமுக அரசின் சார்பில் தமிழ் புதல்வன் திட்டத்திற்கான நிகழ்ச்சி நடைபெற்றது. தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பால் பிரின்சிலி, அரூர் வருவாய் கோட்டாட்சியர் வில்சன் ராஜசேகர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் தமிழக வேளாண்மை துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் கலந்து கொண்டு மாணவர்களுக்கும் மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் நிகழ்ச்சிக்கான திட்டத்தை துவக்கி வைத்தார்.

குறிப்பாக மக்கள் பிரதிநிதிகளாக செயல்பட்டு வரும் அரசு உயர் அதிகாரியான அரூர் வருவாய் கோட்டாட்சியருக்கு அமர இருக்கை வசதி ஏற்படுத்தாமல் இருந்தனர். மேடையில் போடப்பட்ட இருக்கைகளில் எல்லாம் திமுகவின் கட்சி உறுப்பினர் முதல், கிளை, ஒன்றிய,மாவட்ட செயலாளர் என அனைத்து தி.மு.கவினரும் இடம் பிடித்து அமர்ந்து கொண்டனர்.

சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சி திமுகவினரின் மேடை நாகரிகம் குறித்த கேள்வியை எழுப்பி உள்ளது.

ஒரு உயர் அதிகாரி சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக அரசு நிகழ்ச்சியில் அமர்வதற்கு இடம் இல்லாமல் நின்று கொண்டிருப்பதும், அரசியல்வாதிகள் திமுக கட்சி நிர்வாகிகள் என பலர் இருக்கையை பட்டா போட்டுக் கொண்டது நாகரீகமற்ற அரசியல் நோக்கத்தை உணர்த்துவதாக பலரும் கருத்து தெரிவித்தனர்.

  • Allu Arjun press meet emotional statement நானும் ஒரு குழந்தைக்கு அப்பா தான்..கண்ணீரோடு பேட்டியளித்த அல்லு அர்ஜுன்..!
  • Views: - 413

    0

    0