‘#DictatorRavi #GetOutRavi’… சென்னையில் வைரலாகும் போஸ்டர்… பிரதமரின் வருகையின் போது அதிர்ச்சி கொடுத்த திமுகவினர்..!!

Author: Babu Lakshmanan
8 April 2023, 2:14 pm

சென்னை : பிரதமர் மோடி தமிழக வர உள்ள நிலையில், ஆளுநர் ஆர்என் ரவிக்கு எதிராக சென்னையில் திமுகவினர் போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு நிலவி வருகிறது.

கடந்த சில நாட்களாக ஆளுநர் ஆர்என் ரவி சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசி வருகிறார். சில சமயங்களில் ஆளுநர் ஆர்என் ரவி நேரடியாகவே தமிழக அரசை கடுமையாக விமர்சித்தும், எதிர்த்தும் பேசி வருகிறார். இதனால், திமுகவினர் ஆளுநருக்கு எதிராக கொந்தளித்து வருகின்றனர்.

அண்மையில், ராஜ்பவனில் நடந்த நிகழ்ச்சியில் மாணவர்களுடன் கலந்துரையாடிய ஆளுநர் ஆர்என் ரவி, கூடங்குளம், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், மக்களை தூண்டி விட்டே . ஸ்டெர்லைட் ஆலையை மூட வைத்ததாகவும் கூறியிருந்தார்.

இதனிடையே, பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று சென்னை வருகிறார். இந்த நிலையில், ஆளுநர் ஆர். என்.ரவியை கண்டித்து சென்னை தேனாம்பேட்டை , அண்ணா சாலை, மற்றும் அறிவாலயம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்தப் போஸ்டரில், ‘ஆட்டுக்கு தாடியும், தமிழ்நாட்டுக்கு ஆர்.என்.ரவுயும் எதற்கு ? #DictatorRavi #GetOutRavi என திமுக பிரமுகர் வழக்கறிஞர் ஹேமந்த் அண்ணாதுரை என்பவர் சென்னை முழுவதும் பரபரப்பு போஸ்டர் அடித்து ஒட்டிள்ளார்.

ஏற்கனவே சென்னையில் இதேபோல் சென்னை முழுவதும் #GetOutRavi என போஸ்டரை அடித்து ஒட்டியவர் இவர்தான் என்பது கூறப்படுகிறது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 392

    0

    0