அதிமுக திட்டங்களுக்கு லேபிள் ஒட்டும் திமுக.. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்!

Author: Udayachandran RadhaKrishnan
16 August 2024, 2:38 pm

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற அ.தி.மு.க. அவசர செயற்குழு கூட்டத்திற்கான காரணம் குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்தார்.

அவர் கூறியதாவது: அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களுக்கு திமுக ஆட்சியில் மூடுவிழா நடக்கிறது.அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களுக்கு திமுக ஆட்சியில் மூடுவிழா நடக்கிறது.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லை. விலைவாசி, வரி உயர்வு, மின் கட்டணம் உயர்ந்துள்ளது.

திமுக அரசு அம்மா உணவகத்தை நீர்த்து போக செய்துள்ளது. அம்மா சிமெண்ட்டை வலிமை சிமெண்ட் என மாற்றினார்கள். அம்மா மருந்தகங்களை மூடி விட்டு முதல்வர் மருந்தகங்களை தொடங்குகின்றனர்.

அதிமுக திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் பணிகளை மட்டுமே திமுக அரசு செய்கிறது என்று குற்றம் சாட்டினார்.

  • Shocking incident shared by shalini pandey உடை மாற்றும் அறையில் திடீரென நுழைந்த இயக்குனர்! அதிர்ந்துப்போன ஷாலினி பாண்டே…