பூனை குட்டியை கவ்வுவது போல் காங்கிரஸ் கட்சிக்கு அழுத்தம் கொடுக்கும் திமுக : கிருஷ்ணசாமி கண்டனம்!!!

Author: Udayachandran RadhaKrishnan
6 October 2023, 8:42 pm

பூனை குட்டியை கவ்வுவது போல் காங்கிரஸ் கட்சிக்கு அழுத்தம் கொடுக்கும் திமுக : கிருஷ்ணசாமி கண்டனம்!!!

அரசியல் லாபம் பார்க்காமல் தமிழகத்தின் நலன் கருதி காவிரி நதிநீர் பங்கீட்டில் திமுக அரசு செயல்பட வேண்டும். புதிய தமிழகம் கட்சி நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி பேட்டி

காவிரி நதிநீர் ஆணையத்தின் படி ஜூன் மாதத்தில் இருந்து ஆகஸ்ட் மாதம் வரை வந்து சேர வேண்டிய பங்கு இட்டு நீர் முறையாக வந்து சேரவில்லை.

கர்நாடகாவில் தோழமைக் கட்சியாக காங்கிரஸ் இருப்பதால் தமிழக அரசு போதி அளவில் அழுத்தம் கொடுக்கவில்லை. பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் குருவை சாகுபடி நீர் இல்லாமல் பெருகிவிட்டது.

நீதிமன்ற அறிவுறுத்தலின்படி நதிநீரை சரியாக பங்கிட்டு வழங்க வேண்டும். இதனை கண்டித்து வரும் 16ஆம் தேதி தமிழகம் முழுவதும் புதிய தமிழகம் கட்சி போராட்டத்தில் ஈடுபட உள்ளது.

அனைத்துக் கட்சிகளும் எதிர்ப்பது போல் ஆளுங்கட்சியான திமுகவும் நதிநீர் பங்கீட்டுக்காக போராட வேண்டும். கர்நாடக முதல்வர் மற்றும் நீர் பாசன துறை அமைச்சரை சந்தித்து நீர் பங்கிட்டினை முறைப்படுத்த வேண்டும். பூனை குட்டியை கவ்வுவது போல் மென்மையாக அழுத்தம் கொடுக்கிறது திமுக அரசு.

கடுமையாக மோதாமல் கூட்டணியில் இருந்து வெளியேறி விடுவோம் என மென்மையாக நடந்து கொள்கிறார்கள். இதில் திமுகவும் காங்கிரசும் இரட்டை வேடம் போடுகிறது.

கர்நாடகவில் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்யாமல் வேறு கட்சி இருந்திருந்தால் திமுகவும் போக்கு இப்படித்தான் இருந்திருக்குமோ.
டெல்டா பாசன நெற்கதிரை நம்பி எட்டு கோடி தமிழக மக்கள் இருக்கின்றனர். அரசியல் லாபம் பார்க்காமல் தமிழகத்தின் நலன் கருதி திமுக அரசு செயல்பட வேண்டும்

திமுக அரசின் தேர்தல் வாக்குறுதி 311 ன் படி இடைநிலை ஆசிரியருக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்குவோம் என வாக்குறுதி அளித்து இதுவரை வழங்கப்படவில்லை.

அவர்கள் கமிட்டி போட்டு தீர்மானிப்போம் என்று வாக்குறுதியில் கூறவில்லை வாக்குறுதியில் கூறியது போல வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். அதேபோல் ஆசிரியர்களின் தலைவர்கள் பொறுப்பாளர்களிடம் முதல்வர் கலந்தாய்வு அதற்கு தீர்வு காண வேண்டும்.

அதேபோல் தமிழக அரசின் கல்வி தரத்தை உயர்த்துவதற்கு பகுதி நேர ஆசிரியர்கள் என்பதை நீக்கிவிட்டு முழு நேர ஆசிரியர் பணிக்கு நியமனம் செய்ய வேண்டும்.

தற்பொழுது 10 ஆண்டுகள் 5 ஆண்டுகள் பணியாற்றி வரும் பகுதி நேர ஆசிரியர்களை தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாக நியமனம் செய்ய வேண்டும் என பேசினார்

  • ajith kumar asking for script to bala but bala did not give Full Script கொடுக்க மாட்டேன்- அஜித்தின் முகத்துக்கு நேராக சொன்ன பிரபல இயக்குனர்…
  • Close menu