திமுக ரவுடிகள் உங்கள் வாக்கை போட்டுவிடுவார்கள்.. தவறாமல் சென்று வாக்களியுங்கள் ; பிரேமலதா விஜயகாந்த் அட்டாக்!

Author: Udayachandran RadhaKrishnan
3 April 2024, 8:55 pm

திமுக ரவுடிகள் உங்கள் வாக்கை போட்டுவிடுவார்கள்.. தவறாமல் சென்று வாக்களியுங்கள் ; பிரேமலதா விஜயகாந்த் அட்டாக்!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டியில் தேமுதிக பொது செயலாளர்
பிரேமலதா விஜயகாந்த் திருவள்ளூர் பாராளுமன்ற தேமுதிக
வேட்பாளர் கு.நல்லதம்பி அவர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு முரசு சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

திமுக ரவுடிகள் உங்கள் வாக்கை போட்டு விடுவார்கள் தவறாமல் சென்று வாக்களியுங்கள். விஜயகாந்த் மறு உருவம் நல்ல தம்பி. விஜயகாந்த்திற்கு
நன்றி கடன் செலுத்துங்கள் உங்கள் வாக்கினை முரசு சின்னத்திற்கு செலுத்துங்கள்.

எம்ஜிஆர் ஜெயலலிதா புரட்சிக் கலைஞர் மக்களுக்கு நல்லதை செய்தார்கள்
எங்கள் கூட்டணி தமிழக முழுவதும் 40 இடங்களிலும் வெல்லும் கருத்து கணிப்புகளை மிஞ்சி வெற்றி அமையும். வெற்றி விழாவிற்கு நான் வருவேன்.

மக்களுக்கு நன்றி சொல்ல மீண்டும் வருவேன். கும்மிடிப்பூண்டியில் பேருந்து நிலையம் அமைக்க படும் கும்மிடிப்பூண்டி மருத்துவமனை தரம் உயர்த்தப்படும்.

விவசாயிகளுக்கு வாசனை திரவிய செண்ட் தொழிற்சாலை அமைக்கப்படும் கஞ்சா போதைப்பழக்கம் தமிழகம் முழுவதும் அதிகரித்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

  • Priyanka mother of 3 daughters.. Sensational news about her 2nd husband Vasi 3 மகள்களுக்கு தாயான பிரியங்கா.. 2வது கணவர் வசி குறித்து பரபரப்பு தகவல்!