திருச்சியை கொடுக்க மறுத்த திமுக.. தமிழகத்தில் காங்கிரஸ் போட்டியிட உள்ள 9 தொகுதிகள் இதுதான்..!!!
Author: Udayachandran RadhaKrishnan18 March 2024, 1:22 pm
திருச்சியை கொடுக்க மறுத்த திமுக.. தமிழகத்தில் காங்கிரஸ் போட்டியிட உள்ள 9 தொகுதிகள் இதுதான்..!!!
நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதன் படி இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில், காங்கிரஸ் கட்சிக்கு திருவள்ளூர் (தனி ), கடலூர், மயிலாடுதுறை, சிவகங்கை, கிருஷ்ணகிரி, கரூர், விருதுநகர், கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரி ஆகிய தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த முறை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட திருச்சி, ஆரணி, தேனித் தொகுதி இந்து முறை ஒதுக்கப்படவில்லை. நெல்லையில் போட்டியிட்ட திமுக இந்து முறை அந்த தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு கொடுத்துள்ளது.
இதற்கான ஒப்பந்தம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை முன்னிலையில் ஏற்பட்டது.