அதிமுக தேர்தல் அறிக்கையை பார்த்து அலறும் திமுக : திருவள்ளூர் தொகுதி தேமுதிக வேட்பாளர் விமர்சனம்..!!!

Author: Udayachandran RadhaKrishnan
28 March 2024, 8:28 pm

அதிமுக தேர்தல் அறிக்கையை பார்த்து அலறும் திமுக : திருவள்ளூர் தொகுதி தேமுதிக வேட்பாளர் விமர்சனம்..!!!

திருவள்ளூர் மாவட்டம் தச்சூர் போரக்ஸ் நகரில் அதிமுக கூட்டணி கட்சி சார்பில் திருவள்ளூர் பாராளுமன்ற தேமுதிக வேட்பாளர் கு.நல்லதம்பி அவர்களை அறிமுகம் செய்து வைத்து நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அவரை ஆதரித்து 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறவைக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் பாஜகவை தோல்வி பெற செய்யவேண்டும் எனவும் அனைவரும் சிறப்பாக தேர்தல் பணியாற்ற வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

பின்னர் பேசிய பாராளுமன்ற வேட்பாளர் நல்லதம்பி அறிமுக கூட்டமை வெற்றி கூட்டமாக சிறப்பாக அமைந்து விடுவதாகவும் 2011 ஆம் ஆண்டு அதிமுக தேமுதிக கூட்டணி திமுகவை எதிர்க்கட்சியாக கூட இல்லாமல் செய்ததைப் போன்று பாராளுமன்றத் தேர்தலில் பாராளுமன்றத்தில் திமுகவினர் இல்லாமல் செய்யும் அளவிற்கு அதிமுக தேமுதிக கூட்டணி தமிழகம் முழுவதும் 39 இடங்களிலும் மாபெறும் வெற்றி பெறும் என்று கூறினார்.

அதிமுக தேமுதிக கூட்டணி தேர்தல் அறிக்கையை பார்த்து திமுக அலறி கொண்டிருக்கிறது என அவர் தெரிவித்தார். இதில் முன்னாள் அமைச்சர்கள் ரமணா மாதவரம் மூர்த்தி அப்துல் ரஹீம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் வேணுகோபால் முன்னாள் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் பலராமன் பொன் ராஜா கேஎம்டில்லி ராகேஷ் ஆரம்பாக்கம் சுரேஷ் முல்லைவேந்தன் மெதூர் ஊராட்சி செயலாளர் ரமேஷ் சேகர் ஆரணி ஜெகதீசன் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ