கோட்டாட்சியருக்கு மிரட்டல்.. திமுக தூண்டுதல் பேரில் மிரட்டிய நபர் பாஜக பிரமுகரா?
Author: Udayachandran RadhaKrishnan15 April 2025, 11:36 am
திமுகவினர் தூண்டுதலில் பாஜக பற்றி தவறான தகவலை பரப்பி கோட்டாட்சியரை மிரட்டிய நபர் மீது மாநகர் காவல் ஆணையரிடம் புகார் அளித்த மதுரை மாவட்ட பாஜக நிர்வாகிகள்
மதுரை ஆனையூர் பகுதிக்கு கோட்டாட்சியர் இலவச வீட்டுமனை தொடர்பாக ஆய்வுக்குச் சென்ற பொழுது அந்த பகுதியைச் சேர்ந்த ஹரிச்சந்திரன் என்ற நபர் தன்னை பாஜக கிழக்கு மாவட்ட துணைத் தலைவர் எனக் அறிமுகம் செய்து கொண்டு, கோட்டாட்சியரை மிரட்டி தகாத வார்த்தையால் பேசியுள்ளார்.
இதையும் படியுங்க: திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி; சிவகார்த்திகேயன் பட ஷூட்டிங்கில் நடந்த திடீர் சம்பவம்!
இது தொடர்பான காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகி வேகமாக பரவியுள்ளது.
கோட்டாட்சியர் அளித்த புகாரின் பேரில் கூடல் புதூர் போலீசார் ஹரிச்சந்திரன் என்ற நபர் மீது வழக்கு பதிவு செய்ததுள்ளது
ஆனால் ஹரிசந்திரன் பாஜகவை சேர்ந்தவர் உண்மை புறம்பான தகவல் வெளியில் பரவியது. இது தொடர்பாக மதுரை கிழக்கு மாவட்ட தலைவர் இராஜசிம்மன் இன்று மதுரை மாநகர் காவல் ஆணையரிடம் மனு அளித்தார்.
இது குறித்து பேசிய இராஜசிம்மன் கூறுகையில், மதுரை மாநகர் காவல் ஆணையர் லோகநாதனிடம் பாரதிய ஜனதா கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் பொருட்டு ஹரிச்சந்திரன் என்ற நபர் தன்னை பாஜக என்று அடையாளப்படுத்துவதாகவும், அவர் கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் பொழுது கட்சி கட்டுப்பட்டிற்கு விரோதமாக செயல்பட்டதால் அவர் கட்சியின் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுவிட்டார்.
தற்பொழுது திமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார். திமுகவினரின் தூண்டுதலின் பெயரிலேயே பாஜக கட்சிக்கு களங்கம் விளைவிப்பதற்காகவே பாஜக துணைத்லைவர் என பெயரை பயன்படுத்தி இருக்கிறார். அவர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்”, கூறியுள்ளார்