நாடாளுமன்ற தேர்தல் பணிகளை துவக்கிய திமுக : வாக்குச்சாவடி முகவர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை!!

Author: Udayachandran RadhaKrishnan
12 November 2022, 8:54 pm

நாட்டின் 18-வது மக்களவை தேர்தல் வருகிற 2024-ம் ஆண்டில் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை உடனே தொடங்க வேண்டும் என கடந்த மாதம் 9-ஆம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியிருந்தார்.

மேலும், 2 மாதத்திற்குள் பூத் கமிட்டி அமைக்கும் பணியை முடிப்பதற்கு மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில், திமுக வாக்குச்சாவடி முகவர்களுடன் மு.க ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

234 சட்டசபை தொகுதிகளிலும் உள்ள திமுக வாக்குச்சாவடி முகவர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் வாக்குச்சாவடி முகவர்கள், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 377

    0

    0