அதிமுக தொண்டரை பிளேடால் கிழித்த திமுக.,வினர் : பிரச்சாரம் செய்தவதை தடுத்து அராஜகம்!!

Author: Udayachandran RadhaKrishnan
15 February 2022, 9:59 pm

கோவை : தொண்டாமுத்தூர் பேரூராட்சியில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து கொண்டிருந்த அதிமுக தொண்டரை திமுகவினர் பிளேடால் கிழத்த சம்பவம் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.

கோவை தொண்டாமுத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட அட்டுகல் என்ற இடத்தில் வாக்கு சேகரித்து கொண்டிருந்த அதிமுகவினரை அந்த பகுதியில் உள்ள திமுகவினர் தடுத்து அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதில் அதிமுகவை சேர்ந்த முருகன் என்பவரை கெம்பனூர் பகுதியை சேர்ந்த தங்கான் என்ற திமுகவை சேர்ந்தவர் கையில் மறைத்து வைத்திருந்த பிளேடால் முருகனின் வையிற்றில் கிழித்துள்ளார்.

இதில் காயமடைந்த முருகன் தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.

  • Samantha dating Raj Nidimoru அந்த இயக்குனருடன் நடிகை சமந்தா டேட்டிங்…வெளிவந்த புகைப்படத்தால் ரசிகர்கள் ஷாக்..!