திமுக முப்பெரும் விழா தேதி, இடம் மாற்றம்.. ஆரம்பமே சொதப்பலா? அமைச்சர் விளக்கம்!

Author: Udayachandran RadhaKrishnan
10 June 2024, 11:13 am

மக்களவைத் தேர்தலில் வெற்றி பெறச் செய்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், திமுக சார்பில் இவ்விழா கொண்டாடப்பட உள்ளது.

முதலில் கோவை செட்டிபாளையம் பகுதியில் நடைபெறவிருந்த இவ்விழா, கொடிசியா மைதானத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டதுடன், 14ஆம் தேதி நடைபெறவிருந்த நிகழ்ச்சி 15ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

இது குறித்து திமுக முப்பெரும் விழாவுக்கான அரங்கம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டிய பின், செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் முத்துசாமி “மேற்கு மண்டலம் முழுவதும் திமுக கையில் இருப்பதை கோவை மக்கள் நிரூபித்துள்ளனர். அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்”என்றார்.

  • Nagarjuna akkineni Families Appreciates Sobhita Decision பொழைக்க தெரிஞ்ச புள்ள… சோபிதாவை கொண்டாடும் நாகர்ஜூனா குடும்பம்!