பொதுமக்கள் முன் திமுக எம்எல்ஏவை கடிந்து கொண்ட திமுக ஒன்றிய செயலாளர் : அரசு நிகழ்ச்சியில் திடீர் வாக்குவாதத்தால் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
7 December 2022, 2:22 pm

புதிய அரசு பள்ளி கட்டிட திறப்பு விழாவிற்கு தன்னை முறையாக அழைக்கவில்லை என கூறி திமுக எம்எல்ஏவிடம் ஒன்றிய செயலாளர் பொதுமக்கள் முன்னிலையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் காமராஜர் துறைமுகம் சார்பில் சமூக மேம்பாட்டு பங்களிப்பு திட்டத்தில் 18 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் மதிப்பில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி புதிய கட்டடத்தை சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், ஒன்றிய குழு தலைவர் ரவி ஆகியோர் கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி குத்து விளக்கேற்றி திறந்து வைத்து மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்பித்தனர்.

அப்போது புதிய அரசு பள்ளி கட்டிட திறப்பு விழாவிற்கு தன்னை முறையாக அழைக்கவில்லை என கூறி பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மீஞ்சூர் ஒன்றிய குழு தலைவரிடம் திமுக தெற்கு ஒன்றிய கழக செயலாளர் ஜெகதீசன் பொதுமக்கள் முன்னிலையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் அவரை சமரசம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர். பொதுமக்கள் முன்னிலையில் ஆளும்கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டது முகம் சுழிக்க வைத்தது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 516

    0

    0