‘பார்க்க மினுமினு-னு இருக்கியல்ல’… நகர்மன்ற தலைவி குறித்து திமுக துணைத் தலைவர் தரக்குறைவு பேச்சு.. வைரலாகும் ஆடியோ!!

Author: Babu Lakshmanan
30 November 2022, 11:10 am

திமுகவை சேர்ந்த நகர்மன்ற துணை தலைவர் சுயேச்சை கவுன்சிலரிடம் திமுக நகர் மன்ற தலைவியை பற்றி தரக்குறைவாக பேசும் ஆடியோ வைரலாகியுள்ளது.

கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி பகுதி அண்மையில் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இந்த பகுதியானது பேரூராட்சியாக இருந்து வந்த நிலையில், சமீபத்தில் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு தேர்தல் நடைபெற்றது. இதில் திமுகவைச் சேர்ந்த உறுப்பினர்கள் அதிக இடம் வெற்றி பெற்று, திமுக வசம் சென்றது.

இந்த நகராட்சியில் நகர் மன்ற தலைவராக திமுகவை சேர்ந்த முனவர்ஜான் வெற்றி பெற்றார். மேலும், துணைத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற பசீர் அகமதுவும் திமுகவைச் சேர்ந்தவர். இவர் பள்ளப்பட்டி நகராட்சி திமுக செயலாளராகவும் பொறுப்பில் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் அண்மையில் பள்ளப்பட்டி நகர்மன்ற உறுப்பினர் ஒருவரிடம், நகர் மன்ற தலைவராக உள்ள முனவர் ஜான் குறித்து தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி, அவர் பேசியுள்ள ஆடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது மிகவும் வேகமாக பரவி வருகிறது.

இரண்டு பேருமே திமுகவைச் சேர்ந்தவர்கள் என்பதை மறந்து, பெண்மணி என்று கூட பார்க்காமல் நகர்மன்ற தலைவர் குறித்து துணை தலைவர் பஷீர் அகமது தகாத வார்த்தைகளை பயன்படுத்தி பேசுவதாக ஆடியோ வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 665

    0

    0