மாதனூர் ஒன்றிய குழு உறுப்பினர்களை கருணை கொலை செய்து விடலாமே என திமுக ஒன்றிய குழு உறுப்பினர் முகநூலில் பதிவு செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரியவரிகம் பகுதியை சேர்ந்தவர் திருக்குமரன். திமுக கட்சியை சேர்ந்த இவர் பெரியவரிகம் 6வது திமுக மாதனூர் ஒன்றியக்குழு உறுப்பினராக உள்ளார். இந்நிலையில், இவர் தனது முகநூல் பக்கத்தில் திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்களை கருணை கொலை செய்து விடலாமே என்றும், மக்கள் பணி செய்ய முடியாமல் தவிப்பதாக பதிவு செய்திருந்தது பெரும் ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து மாதனூர் ஒன்றிய குழு உறுப்பினர் திருக்குமரனிடம் கேட்ட போது, “நான் 6வது வார்டு பெரியவரிகம் துத்திப்பட்டு மாதனூர் ஒன்றிய குழு உறுப்பினராக உள்ளேன். மாதனூர் ஒன்றிய குழு தலைவர் சுரேஷ்குமார், துணை தலைவர் சாந்தி சீனிவாசன் ஆகியோர் மாதனூர் ஒன்றியத்தில் உள்ள ஒன்றிய குழு உறுப்பினர்களுக்கு எந்த ஒரு வேலையும் கொடுப்பதில்லை. டெண்டரும் முறைப்படி இல்லை. ஒன்றிய குழு கூட்டமும் சரியாக வைப்பது இல்லை. கவுன்சிலர்களையும் யாரும் மதிப்பது இல்லை. மனம் வெறுத்து போய் பதிவு செய்தேன்.
மேலும், இந்த மூன்று வருடத்தில் பெரியவரிகத்தில் ஒரு சில வேலைகள் மட்டுமே செய்துவிட்டு, மற்ற வேலைகளை ஒன்றிய தலைவர் ஒன்றிய குழு உறுப்பினர்களுக்கு தெரியாமலேயே செய்து விடுகிறார்கள். இது தொடர்பாக பலமுறை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை, எனக் கூறினார்.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளிக்க உள்ளதாக தெரிவிக்கும் அவர், கிளை செயலாளராக இருந்த போது இருந்த மரியாதை கூட தற்போது கட்சியில் இல்லை என்றும், தேர்தலில் 15 லட்சம் செலவு செய்து வெற்றி பெற்று மக்கள் பணிகளை செய்ய விடாமல் ஒன்றிய குழு தலைவர், ஒன்றிய குழு துணை தலைவர் தடுக்கின்றனர் எனவும், மனம் வெறுத்து உட்கார்ந்து உள்ளேன், என தெரிவித்தார்.
சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…
கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…
தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…
Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…
ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…
This website uses cookies.