மதுரை மாநகராட்சி ஒப்பந்ததாரர்களுடன் JAPAN டூர் போன திமுகவினர்.. VIRAL போட்டோஸ்!

Author: Udayachandran RadhaKrishnan
30 April 2024, 12:26 pm

மதுரை மாநகராட்சி ஒப்பந்ததாரர்களுடன் JAPAN டூர் போன திமுகவினர்.. VIRAL போட்டோஸ்!

திமுக மதுரை நகர் செயலாளரும் வடக்கு சட்டமன்ற உறுப்பினருமான தளபதி தலைமையில், மதுரை மாநகராட்சி கவுன்சிலர் சுதன், மதுரை மாநகராட்சியின் மண்டலம் 3ன் தலைவர் முகேஷ்சர்மா, மண்டலம் 2ன் தலைவர் சரவண புவனேஸ்வரியின் கணவர் சரவணன், ம.தி.மு.க., நிர்வாகி சுருதி ரமேஷ், மாநகராட்சி, அரசு பணிகளை மேற்கொள்ளும் முக்கிய கான்ட்ராக்டர்கள் உள்ளிட்ட ‘மெகா’ குழு சிங்கப்பூர், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு 2 நாட்களுக்கு முன் சுற்றுலா சென்றது.

அவர்கள் சுற்றிப்பார்த்த இடங்களை நகர் தி.மு.க., நிர்வாகிகளின் வாட்ஸ்அப் குரூப்பில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு மற்றவர்களை கடுப்பேற்றி வருகின்றனர்.

இதற்கிடையே முதல்வர் ஸ்டாலின் கொடைக்கானலில் நேற்று முதல் (ஏப்.29) மே 4 வரை முகாமிடுகிறார். இதனால் மதுரை அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் கொடைக்கானலுக்கு சென்று முதல்வரை சந்திக்கும் திட்டத்தில் உள்ளனர்.

அவர்களிடம் தேர்தல் ஓட்டுப்பதிவுகள் குறித்து ஆலோசனை நடத்த வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் மதுரை தி.மு.க., குழு சுற்றுலா சென்றது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதற்கு பதிலளிக்கும் விதமாக, ‘சொந்த செலவில்தான் அவர்கள் வெளிநாடு சென்றுள்ளனர்” என தளபதி ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

ஆனால் மதுரை மாநகராட்சியின் முக்கிய கான்ட்ராக்டர்கள் உடன் சென்றுள்ள புகைப்படங்கள் இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

மேலும் படிக்க: கோவை தேர்தல் முடிவை நிறுத்தக் கோரிய வழக்கு.. நீதிபதி கேட்ட ஒரே ஒரு கேள்வி : Court போட்ட அதிரடி உத்தரவு!

தேர்தல் பணிகளை ஈடுபட்ட திமுக நிர்வாகிகள் சுற்றுலா செல்லலாம் தவறில்லை என்றாலும், மதுரை மாநகராட்சியின் முக்கிய கான்ட்ராக்டர்களுடன் சுற்றுலா சென்றுள்ளது, திமுகவினரிடையே பல கேள்விகளை எழுப்பி வருகிறது.

  • Telangana bans special shows சிறப்பு காட்சிக்கு END CARD…அல்லு அர்ஜுன் ஷாக்…பேரதிர்ச்சியில் சினிமா ரசிகர்கள்…!
  • Views: - 357

    0

    0