ஆட்டுக் குட்டியை கொடுமை படுத்தாமல் பிரியாணி போடுங்கள்- அண்ணாமலையின் கோரிக்கையை வைரலாக்கும் திமுக..!

Author: Vignesh
5 June 2024, 1:14 pm

அண்ணாமலை தேர்தலுக்கு முன்பு வேண்டுகோள் விடுத்த வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

கோவை பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க., பா.ஜ.க, அ.தி.மு.க என மும்முனை போட்டி இருந்து வந்த நிலையில் தி.மு.க வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 1,18,068 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இரண்டாம் இடத்தில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்ட அண்ணாமலை 4,50,132 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்தார். அ.தி.மு.க வை சேர்ந்த சிங்கை ராமச்சந்திரன் 2,36,490 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

மேலும் படிக்க: கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுனீங்க.. செல்போனை போலீஸில் ஒப்படைத்த TTF வாசன்..!

இந்நிலையில், தேர்தலுக்கு முன்பு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பா.ஜ.க மாநில தலைவரும், கோவை பா.ஜ.க நாடாளுமன்ற வேட்பாளர் அண்ணாமலை பேசும் போது :-

ஆட்டுக் குட்டியை பிரியாணி சமைத்தாலும், எது சமைத்தாலும் அதனை கொடுமை படுத்தாமல் ஆடு வெட்ட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். மேலும், தி.மு.க வால் கோவையில் டெபாசிட் வாங்க முடியாது என கூறி இருந்தார். இதனால் தி.மு.க தொண்டர்கள் தேர்தல் முடிந்த பின்பு ஆட்டை பிரியாணி போடுவதாக சமூக வலைதளங்களில் பதிவு செய்து வந்த நிலையில், நேற்று தேர்தல் முடிவு வந்து கொண்டு இருந்த போது கோவை கோட்டைமேடு பகுதியில் மட்டன் பிரியாணி சமைத்து அருகில் ஆடுகளை வைத்துக் கொண்டு பொதுமக்களுக்கு பிரியாணி விநியோகம் செய்து தி.மு.க வென்று விட்டது, என்று அண்ணாமலையை கிண்டல் அடிக்கும் விதமாக ஏற்பாடு செய்து இருந்தனர். இதைத் தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் அண்ணாமலை கூறிய வீடியோ, மீம்ஸ்களை தி.மு.க வினர் தற்பொழுது சமூக வலைதளங்களில் பதிவு செய்வது வைரல் ஆகி வருகிறது.

  • Vinayakan viral controversy மீண்டும் அலப்பறை செய்த ஜெயிலர் பட வில்லன்…நடவடிக்கை எடுக்குமா கேரளா சினிமா துறை..!