அடிப்படை வசதிகள் செய்யல.. புகார் அளித்தவருக்கு திமுக இளம் வார்டு கவுன்சிலரின் தந்தை கொலை மிரட்டல் ; வைரலாகும் ஷாக் ஆடியோ..!!
Author: Babu Lakshmanan16 December 2023, 4:44 pm
வார்டு உறுப்பினர் தங்களது பகுதியில் எந்த ஒரு அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை என புகார் அளித்த நபர் மீது ஆபாசமாகவும் கொலை மிரட்டல் விடுத்து பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கொடைக்கானல் நகராட்சி பகுதியுள்ள மக்கள் சுற்றுலாவையும், விவசாயத்தையும் நம்பி வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், கொடைக்கானல் நகராட்சியில் ஏழாவது வார்டு உறுப்பினராக திமுகவைச் சேர்ந்த இளம் பெண் பிரபா ஷாம்லி ஜீவா வெற்றி பெற்றார். இந்நிலையில் வெற்றி பெற்றதில் இருந்து தற்போது வரை எம்ஜிஆர் நகர் பகுதியில் குடிநீர் கழிவு நீர் வாய்க்கால், சாலை உள்ளிட்ட எந்த ஒரு அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என இப்பகுதி மக்கள் தொடர்ந்து நகராட்சி தலைவர் துணைத் தலைவர் ஆணையாளர் உள்ளிட்ட நபர்களிடம் புகார் அளித்து வந்துள்ளனர். அதேபோல் சமூக வலைதளங்களிலும் தங்களது பகுதியில் உள்ள குறைகளை கூறிவந்துள்ளனர்.
இதையடுத்து, நேற்று எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்த அண்ணாதுரை என்பவருக்கு ஏழாவது வார்டு உறுப்பினரின் தந்தை திமுக மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் ஜீவா, அநாகரிகமாகவும், ஆபாசமாகவும் பேசியுள்ளார்.அதேபோல் கொலை மிரட்டலும் விடுத்து பேசி ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது
மேலும், யாரிடம் புகார் கூறினாயோ அவர்களிடமே உங்களது பகுதியில் அடிப்படை வசதிகளை செய்து கொள்ளுங்கள் என்றும் பேசியுள்ளார். இது தொடர்பான ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.