சமூகநீதி என சொல்லிக் கொள்ளும் திமுக சாதிக் கொடுமைகளை தடுக்காதது கண்டனத்துக்குரியது : சீமான் விமர்சனம்!!

Author: Udayachandran RadhaKrishnan
5 November 2023, 7:42 pm

சீமான் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, தமிழகத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்து வரும் ஜாதிய வன்கொடுமை நிகழ்வுகள் பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மன வேதனையும் அளிக்கின்றன.

சமூகநீதி காக்கும் திராவிட மாடல் ஆட்சி என்று கூறிக்கொண்டு ஜாதியக் கொடுமைகளைத் தடுக்காது கைகட்டி வேடிக்கைபார்க்கும் தி.மு.கவின் அலட்சியப்போக்கு, வன்மையான கண்டனத்துக்குரியது.
கடந்த 2021ம் ஆண்டு தமிழகத்தில் மீண்டும் தி.மு.க ஆட்சி ஏற்பட்ட பிறகு, தமிழகத்தில் ஜாதிய வன்கொடுமைகள் நிகழாத நாட்களே இல்லை எனும் அளவிற்கு ஒவ்வொரு நாளும் மிக மோசமான இழிநிலையை நோக்கிச் செல்கிறது.

தேர்தலுக்காக நீட் விவகாரத்தில் திமுக வேஷம் போடுகிறது. நீட் தேர்வை கொண்டு வரும் போது அதன் பாதிப்பு திமுக காங்கிரசிற்கு தெரியாதா? நீட்டுக்கு எதிராக கையெழுத்து வாங்கி என்ன செய்வீங்க?. இவ்வாறு சீமான் கூறினார்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!