இளைஞர்களை தவறான பாதைக்கு கொண்டு செல்கிறதா ஹீரோக்களின் ஆக்ரோஷமான காட்சிகள்.? என்னதான் நடக்கிறது சினிமாவில்..?

Author: Rajesh
3 ஏப்ரல் 2022, 12:04 மணி
Quick Share

திரைப்படங்கள் வெளியாகும் முன் அவற்றை பற்றி போஸ்டர்களும், முன்னோட்டங்களும் வெளிவருவது வழக்கம். அந்த காட்சிகள் அந்த படம் எதை நோக்கி செல்கிறது என்பதை வெளிப்படுத்துவற்கு படக்குழு எடுக்கும் முயற்சிகள்.

ஆனால் சமீபத்தில் வெளியான தமிழ் சினிமாவின் முதற்கட்ட பட போஸ்டர்களில் ஒரு ஒற்றுமை காணப்படுகிறது. அதாவது, ஹீரோக்கள் கைகளில் ஆயுங்களுடன் இருப்பது தான். அந்த காட்சிகள் அந்த படத்திற்கு தொடர்பானது என்றாலும் அதனை சில இடங்களில் தற்போது தவறாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

குடும்ப பின்னணியில் இருந்து வெளிவரும் படங்களில் கூட, வெளியிடப்படும் போஸ்டர்களில் ஹீரோக்கள் ஆக்ரோஷமாக காட்சி அளிக்கிறார்கள். அந்த வகையில் , அண்மையில் வெளியான அண்ணாத்த, எதிர்க்கும் துணிந்தவன் போன்ற படங்களின் கதை குடும்ப பின்னணி கொண்ட கதைகள் தான்.

இருந்தாலும் அந்த பட அறிவிப்பு குறித்து வெளியிடப்படும் முதல் கட்ட போஸ்டர்களில் கையில் ஆயுதங்களை வைத்திருப்பது போன்றும், முகத்தில் ஆக்ரோஷமான கோபத்தை வெளிப்படுத்தும் வகையில் தான் இருக்கும். அப்படி தான் ரஜினியும், சூரியாவும் கத்தியுடன் காட்சி அளித்திருப்பார்கள்.

இது ஒருபுறம் இருக்க படங்களின் காட்சி அமைப்பால் சீரழியும் இளைய தலைமுறையினரை தவறாக சிந்திக்க வைக்கின்றன. வலிமை திரைப்படத்தில் இடம்பெற்ற பைக் சண்டை காட்சிகள் பெரும்பாலான இளைய தலைமுறையினரை அதே போல் ஸ்டண்ட் செய்ய தூண்டியதை பரவலாக காணமுடிந்தது.

சில ஆண்டுகள் முன்பு சர்கார் திரைப்படம் போஸ்டர்களில் விஜய் சிகரெட் பிடிக்கும் படி இருந்தது பெரும் சர்ச்சைகளை கிளப்பியது. பின்னர் அதனை படக்குழு நீக்கியது. அதேபோல் நடிகர் ரஜினிகாந்த் வெளிப்படையாக தன்னுடைய ரசிகர்களை சிகரெட் புடிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்ட செய்திகளும் பல வெளிவந்தன. இருந்தும் ரசிகர்கள் சினிமாவில் பார்த்து புகைப்பிடிப்பது பெரிதும் அடங்கியவாறு தெரியவில்லை.

சினிமாவில் காட்டப்படும் ஆக்ரோஷமான சண்டை காட்சிகள் அனைத்தும் போலியானது என ரசிகர்கள் தாங்களே உணர வேண்டும். சினிமாவை ரசிகர்கள் ரசிப்பதோடு மட்டும் நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் சீரழியும் இளைய தலைமுறையினரை எவராலும் திருத்தவோ, மாற்றவோ முடியாது என்பதே நிதர்சனமான உண்மை.

  • Woman Aghori ஒட்டுத் துணியில்லாமல் கோவிலுக்குள் நுழைந்த பெண் அகோரி… அனுமதி மறுப்பால் தீக்குளிக்க முயற்சி!
  • Views: - 1247

    0

    0