குக் வித் கோமாளி பிரபலத்தின் பெயரில் பணம் பறிக்கும் கும்பல்.?வெளியான அதிர்ச்சி தகவல்.!
Author: Rajesh29 May 2022, 1:56 pm
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கலக்கப்போவது யாரு என்ற காமெடி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு அறிமுகமானவர் புகழ். இதனையடுத்து குக் வித் கோமாளி என்ற காமெடி நிகழ்ச்சி அதே தொலைக்காட்சியில் நடத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் கோமாளிகளில் ஒருவராக புகழ் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு புகழின் வளர்ச்சி அசுர வேகத்தில் இருக்கிறது.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் புகழ் அடைந்த பிறகு, கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பும் கிடைத்திருக்கிறது.”Mr Zoo Keeper” என பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தை ஜே சுரேஷ் என்பவர் இயக்கவுள்ளார். மேலும், இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். பிலிப்பைன்ஸில் இந்தப் படத்தின் ஷூட்டிங் நடந்துவருவதாக கூறப்படுகிறது.
இந்த சூழலில் புகழ் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி என பேசி பலர் பணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் தன் பெயரில் நடக்கும் மோசடி குறித்து புகழ் விளக்கம் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், “நான் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி என கூறி பலர் மோசடியில் ஈடுபடுகின்றனர். நான் பங்கேற்கும் நிகழ்ச்சி குறித்த அறிவிப்பை நானே வெளியிடுவதனால் யாரும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்” என கேட்டுக்கொண்டுள்ளார்.