சாப்பிடும் போது பேசவோ, சிரிக்கவோ கூடாது… ஏன் தெரியுமா..? அரசு மருத்துவமனை முதல்வர் கொடுத்த முக்கியமான அட்வைஸ்..!!

Author: Babu Lakshmanan
19 October 2022, 4:10 pm

உணவு அருந்தும் போது பேசுவதோ சிரிப்பதோ உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளை தவிர்க்க வேண்டும் என்று திருச்சி அரசு மருத்துவமனை முதல்வர் நேரு அறிவுரை வழங்கியுள்ளார்.

திருச்சி மாவட்டம், லால்குடி அடுத்துள்ள செம்பரை கிராமத்தை சேர்ந்த மார்ட்டின் மேரி. இவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சப்போட்டா விதையை பேசிக்கொண்டு சாப்பிட்டபோது, எதிர்பார்ப்பு விதமாக விழுங்கியதால் மூச்சு அடைப்பு ஏற்பட்டது.

இதன் காரணமாக அவர் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு வந்தார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சப்போட்டா விதை அவருடைய மூச்சு குழாய் வழியாக நுரையீரலின் அடிபாகத்திற்கு சென்று தங்கிவிட்டதை கண்டறிந்தனர்.

இதனால், அவருக்கு தொடர்ந்து மூச்சுத் திணறல் ஏற்பட்டதால், கடந்த 15ம் தேதி திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள காது, மூக்கு, தொண்டை பிரிவு தலைமை மருத்துவர் பழனியப்பன், சுந்தரராமன் மற்றும் மயக்கவியல் மருத்துவர் சுரேஷ் தலைமை மயக்கவியல் மருத்துவர் சீனிவாசன் ஹரிவராசன் ஆகியோர் அடங்கிய குழு இணைந்து சிகிச்சை அளித்தது.

பிரான்சஸ் ஸ்கோபி என்ற சிகிச்சை மூலம் தொண்டையில் நுண்துளையிட்டு அதன் வழியாக நுரையீரலில் அடியில் சிக்கி இருந்த சப்போட்டா விதையை சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக அறுவை சிகிச்சை மேற்கொண்டு பத்திரமாக அகற்றியுள்ளனர்.

இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அரசு மருத்துவமனை முதல்வர் நேரு கூறியதாவது :- சமீபத்தில் இதேபோன்று பிரச்சனைகளோடு வந்த மூன்று நபர்களுக்கு இந்த சிகிச்சை முறையை பயன்படுத்தி அகற்றி உள்ளோம்.

இந்நிலையில் இந்த சிகிச்சை மிகவும் கடினமான முறையில், ஒரு பெரிய மருத்துவக் குழு இணைந்து வெற்றிகரமாக செய்து முடித்துள்ளது. இந்த சிகிச்சை பொறுத்தவரை தனியார் மருத்துவமனைகளில் செய்திருந்தால் குறைந்தபட்சம் 5 லட்சத்திலிருந்து 7 லட்சம் வரை செலவாகி இருக்கும். எனவே நாம் இலவசமாக திருச்சி அரசு மருத்துவமனையில் செய்துள்ளோம்.

உணவு அருந்தும் போது பேசுவதோ சிரிப்பதோ உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளை தவிர்க்க வேண்டும், என்று கேட்டுக் கொண்டார்.

  • Ethirneechal 2 cast updates விஜய் டிவியில் இருந்து சன் டிவி-க்கு தாவிய நடிகை…அப்போ எதிர்நீச்சல் 2 வில்லி இவுங்க தானா..!
  • Views: - 491

    0

    0