காலை 7 மணிக்கே டாஸ்மாக் கடைகள் திறப்பா? அமைச்சர் முத்துசாமி விளக்கம்!!!

Author: Udayachandran RadhaKrishnan
12 July 2023, 9:22 pm

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் காலையிலேயே திறக்கப்படுவதாகக் கூறப்பட்டுவந்த நிலையில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி, இதற்கு மறுப்பு தெரிவித்து பதில் அளித்துள்ளார்.
டாஸ்மாக் கடைகள் வழக்கம் போல் பகல் 12 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 10 மணிக்குதான் மூடப்படும் என அமைச்சர் முத்துசாமி விளக்கமளித்துள்ளார்.
மேலும் கணினி வழி ரசீது, கண்காணிப்பு கேமரா பொருத்துவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.

மது குடிப்போர் எண்ணிக்கையை குறைக்க மதுக்கடைகள் மூலமாகவே நடவடிக்கை எடுக்க ஆலோசிக்கப்பட்டுள்ளது. முதன்முறை மதுகுடிக்க வருவோரை அழைத்து அவர்களுக்கு கவுன்சிலிங் வழங்கவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் பணியாளர்களின் பிரச்சனைகளையும் தீர்த்து வைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது எனவும் அமைச்சர் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம் அளித்து பேசியுள்ளார்.

  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…