உருப்படியா வேலையை செய்யுங்க.. இல்லனா சும்மா விட மாட்ட : அரசு அதிகாரிகளை அதட்டிய அமைச்சர் மனோ தங்கராஜ்!!

Author: Udayachandran RadhaKrishnan
30 January 2023, 6:43 pm

குளத்தின் கரையை சரி செய்யும் பணியை துவக்கி வைக்கச் சென்ற தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் மனோதங்கராஜ் கடுமையாக அதிகாரிகளை சாடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் அழகிய பாண்டிபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட கீரன் குளத்தின் கரை சரிசெய்து நடைபாதை அமைக்கும் பணிக்கு ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதன் பணி துவக்க விழாவிற்காக தமிழக தகவல் தொழில்நுட்பவியல் துறையில் அமைச்சர் சென்றார்.

அப்போது பணி தொடர்பான திட்டம் குறித்து அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டார். அதிகாரி அளித்த பணி தொடர்பான திட்டத்தால் திருப்தி அடையாத அமைச்சர், பணிகள் சரியாக நடைபெறவில்லை என்றால் அதிகாரிகளை சும்மா விடமாட்டேன் என ஆவேசத்தோடு கூறிய அவர் தனது உதவியாளர்களிடம் உடனடியாக மறு ஆய்வு செய்யுமாறு உத்தரவிட்டார்.

தண்ணீர் தேக்கி வைக்க வேண்டிய அளவை அதிகப்படுத்த வேண்டும் எனவும் குளத்தின் கரையில் நடைபாதை அமைப்பது என்பது ஏமாற்று வேலை எனவும் நடைபாதை அமைப்பதற்கு அந்தப் பகுதி நகர பகுதி அல்ல எனவும் தன்னிடம் விவாதித்து விட்டு இது போன்ற திட்டத்தை மேற்கொண்டு இருக்க வேண்டும் எனவும் அதிகாரிகளோடு கடிந்து பேசினார்.

தொடர்ந்து பேரூராட்சி பெண் செயல் அலுவலரை அழைத்து இது குறித்து கேட்டபோது அவர் அளித்த பதிலும் அவருக்கு திருப்தியாக இல்லாததால் அமைச்சரிடம் பேசுவதை தெளிவாக பேசுங்கள் என ஆவேசத்துடன் பேசினார்.

பணி துவக்க விழாவிற்கு வருகை தந்த அமைச்சர் அதிகாரிகளுடன் ஆவேசத்தோடு பேசி பணி குறித்து கடும் விமர்சனத்தை முன் வைத்தது அங்கு திரண்டு இருந்தவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 826

    0

    0