தமிழகத்துக்கு நல்லது நடக்கணும்னா இதை மட்டும் செய்யுங்க : திமுக அரசுக்கு தங்கர்பச்சான் யோசனை!

Author: Udayachandran RadhaKrishnan
17 June 2024, 10:54 am

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பா.ம.க. சார்பில் கடலூர் பாராளுமன்ற தொகுதியில் இயக்குனர் தங்கர் பச்சான் போட்டியிட்டார்.

ஆனால் அவர் வெற்றி வாய்ப்பை இழந்தார். எனினும் இயக்குனர் தங்கர் பச்சான் கடலூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார்.

அதன்படி, அவர் நெய்வேலி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சமட்டிக்குப்பம் புலியூர் சத்திரம் ஆயிப்பேட்டை, வெங்கடாம்பேட்டை, பாச்சாரப்பாளையம், வடக்குத்து, வடக்குமேலூர், இந்திராநகர், 30 வட்டம் அடங்கிய நெய்வேலி நகரம் உள்ளிட்ட 50 மேற்பட்ட கிராமங்களில் மக்களை சந்தித்து நன்றி கூறினார்.

அப்போது நிருபரிடம் அவர் கூறியதாவது,மக்களை சந்தித்து நான் நன்றி சொன்னால் மக்கள் எனக்கு ஆறுதல் கூறுகிறார்கள். என்னை பார்த்து கண்ணீர் விடுகிறார்கள்.

நான் தோற்றாலும் என் மக்களுக்கு செய்ய வேண்டிய சேவையை தொடர்ந்து செய்து கொண்டே இருப்பேன். 40 தொகுதியும் வென்ற தி.மு.க. கூட்டணி இனிமேலாவது மக்களுக்கு பயனுள்ளவாறு செயல்பட வேண்டும். கடந்த 5 ஆண்டு வெளிநடப்பு மட்டுமே செய்தது தி.மு.க .கூட்டணி.பாஜக மீதான விரோத போக்கை கைவிடப்பட்டால் மட்டுமே தமிழகத்திற்கு நல்லது நடக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

  • valaipechu bismi said the reason behind empuraan movie re censor on sudden விடுமுறை நாளில் சென்சார் பண்ண வேண்டிய அவசியம் என்ன? எம்புரான் விவகாரத்தின் உண்மை பின்னணி இதுதான்- ஓபனாக போட்டுடைத்த பிரபலம்