மின்வெட்டு வராம இருக்க இத பண்ணுங்க : தமிழக அரசுக்கு காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் அட்வைஸ்!!

Author: Udayachandran RadhaKrishnan
23 April 2022, 12:00 pm

தமிழகத்தில் மின் தட்டுப்பாட்டை போக்க மின் உற்பத்தி செய்யும் நிலையங்களில் தொய்வு ஏற்படா வண்ணம் தமிழக அரசு பார்த்துக் கொள்ள வேண்டும் என குமரி பாராளுமன்ற உறுப்பினர் எம்பி விஜய் வசந்த் செய்தியாளர்களுக்கு வலியுறுத்தியுள்ளார்.

கன்னியாகுமரி தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் இன்று அகஸ்தீஸ்வரத்தில், மறைந்த வசந்தகுமார் மணிமண்டபத்தில் மக்கள் குறை கேட்கும் முகாமை துவக்கினார்.

தொடர்ந்து அவர் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் மக்கள் குறைகளை கேட்டு அதிகாரிகள் மூலம் அதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள உள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விஜய் வசந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது, கன்னியாகுமரி மாவட்டத்தில் நான்கு வழிச்சாலை பணிகள் இரண்டு ஆண்டுகளுக்குள் முடிக்க வேண்டுமென கூறப்பட்டுள்ளது மண் கிடைப்பதில் தாமதம் காரணமாக இந்த பணி கால தாமதமாக சொல்லப்படுவதால் மத்திய அரசு இதனை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதேபோன்று இரட்டை ரயில் பாதை பணிகளை துரிதப்படுத்தி குறிப்பிட்ட காலத்திற்குள் அதனை முடிக்க வேண்டும் என ரயில்வே அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நிலக்கரி பற்றாக்குறை காரணமாக மின் தடை ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில் மத்திய அரசு அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களில் எந்தவிதமான தொய்வும் ஏற்படா வண்ணம் தமிழக அரசு அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காணாமல் போகும் மீனவர்களை கண்டுபிடிக்க உரிய வசதிகள் கோரி மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது என்று அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர்கேடி உதயம் வட்டாரத் தலைவர்கள் முருகேசன்.அசோக் ராஜ் மற்றும் ஸ்ரீநிவாசன் .கிங்ஸ்லி,சேகர் ஆரோக்கிய ராஜன் உட்பட பலர்கலந்து கொண்டனர்

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 1223

    0

    0