Categories: தமிழகம்

உங்க கட்சி தலைவர்களை பற்றி பேச உங்களுக்கு தைரியம் இருக்கா? அண்ணாமலைக்கு ஆர்பி உதயகுமார் கேள்வி!

மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதி டி.குன்னத்தூர் அம்மா கோவிலில் 2000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சார சாரையாக வந்து சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் முன்னிலையில் அதிமுகவில் தங்களை இணைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

முன்னதாக புரட்சித் தலைவர் மற்றும் புரட்சித்தலைவி திருவுருவ வெங்கல சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார், இன்றைக்கு இருக்கக்கூடிய இந்த அரசு கையாளாகாத அரசாக மக்களுடைய வாழ்வாதார ஜீவாதார உரிமைகளை விட்டுக் கொடுக்கின்ற ஒரு அரசாகத்தின் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

புதிய அணை கட்டும் பிரச்சனை இன்றைக்கு விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. ஆகவே முல்லைப் பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டுவோம் என்ற கேரளா அரசு தொடர்ந்து இன்றைக்கு தொடர்ந்து பிரச்சனை செய்து கொண்டிருக்கிறார்கள்.

நடவடிக்கை எடுக்கக் கூடியவேலையிலே திமுக அரசு மௌனம் சாதித்துக் கொண்டிருப்பது நமது மக்களுடைய வாழ்வாதார மக்கள் ஜீவாதாரம் பரிவாகக் கூடிய ஒரு நிலையை இன்றைக்கு இந்த திமுக அரசு கண்டும் காணாமல் இருப்பது வேதனையாக இருக்கிறது தென் தமிழக மக்களுடைய ஜீவாதாரமாகவும் வாழ்வாதாரமாகவும் குறிப்பாக ஐந்து மாவட்டங்கள் நம்முடைய மதுரை.தேனி, திண்டுக்கல்,சிவகங்கை,ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களுடைய ஜீவாதார உரிமையாக வாழ்வாதார உரிமையாக இருக்கக்கூடிய இந்த அணையை பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் ஆளுகிற அரசுக்கு உள்ளது.

அதையெல்லாம் மறந்து மறந்து மக்கள் நலனை அக்கறையில்லாமல் செயல்படுவது வேதனையாக இருக்கிறது .ஏற்கனவே கேரளா அரசு தொடர்ந்து பிரச்சினை செய்து வருவதில் நமக்கு ரணமாக இருக்கிற மனதிலே வெந்த புண்ணிலே வேல் பாய்ச்சுவதாக இந்த திமுக அரசினுடைய நடவடிக்கை அமைந்திருக்கிறது.

அணையை நம்பி மதுரை,திண்டுக்கல்,தேனி, ராமநாதபுரம்,சிவகங்கை ஆகிய ஐந்து மாவட்டங்களிலே ஏறத்தாழ 2 லட்சத்து 17 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெற்று வருகிறோம். இந்த பாசன வசதி கூட கேரளாவினுடைய பிடிவாதத்தால் தான் சுருங்கி இருப்பதை எல்லோரும் அறிவார்கள் 1979 லே அன்றைக்கு 152 அடி தேக்கக்கூடிய ஒரு சூழ்நிலை இருந்தபோது 79க்கு முன்பாக இருந்த பாசன பரப்பெல்லாம் குறைந்து நீர்மட்டத்தை 136 அடியாக குறைத்ததன் காரணமாகத்தான் பாதிப்பு ஏற்பட்டது.

அன்றிலிருந்து இன்று வரை தொடர்ந்து பிரச்சனைகளை செய்து கொண்டு வருகிறது இதற்கு நிர ந்தர தீர்வு காண ஜெயலலிதா தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் சட்டப்போராட்டத்தை நடத்தி 142 அடியை உடனடியாக தேக்கி கொள்ளலாம் பேபி அணையை சீரமைத்ததற்கு பிறகு 152 அடியை தேக்கிக் கொள்ளலாம் என்கிற ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை நம்முடைய வாழ்வாதாரத்தை ஜீவாதாரத்தை காப்பாற்றுகிற இந்த உரிமையை பெற்றுக் கொடுத்தார்கள்.

ஆனால் இன்றைக்கு இருக்கக்கூடிய அந்த அரசு அதை காப்பாற்ற தவறிவிட்டது. எப்போதெல்லாம் முயற்சி எடுக்கிறோமோ அப்போது எல்லாம் தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிற திமுக அரசு அதற்கு உறுதுணையாக இருக்கிறதோ உடந்தையாக இருக்கிறதோ என்கிற ஐயம்கூட நமக்கு ஏற்படும் போதுதான் இதுபோன்ற உரத்த குரலிலே பிரச்சனைகளை கேரளா அரசு எழுப்புவதை நாம் வாடிக்கையாக பார்க்கிறோம் ஒவ்வொரு முறையிலும் பிரச்சனை ஏற்படுத்தி வருகிறது 142 அடியில் இருந்து 152 அடி உயர்த்துவதற்கு குறிப்பாக இந்த தென்மேற்கு பருவமழையில் நமக்கு உபரி நீர் கேரளாவில் இருந்து கிடைக்கிற போதெல்லாம் அதில் பிரச்சனைகளை இந்த கேரளா அரசு உருவாக்கி வருகிறது.

தற்போது 366 மீட்டர் தொலைவில் புதிய அணை கட்டிய தீருவோம் என்று ஜனவரி மாதமே கேரளா அரசு செய்திருப்பது உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டிய இந்த திமுக அரசு மௌனம் காப்பது என்பது நம்முடைய ஜீவாதார உரிமை காவு கொடுக்கின்ற சூழலை பார்க்கின்றோம்.

ஆகவே சுற்றுச்சூழல் அனுமதி கேட்டு இன்றைக்கு மனுதாக்கல் செய்து மீண்டும் பிரச்சனையை கேரளா அரசு ஏற்படுத்தியிருக்கிறதுநாம் கேட்பது என்னவென்றால் அவர்கள் எந்த கூடுதல் சுமையையும் நமக்கு தர வேண்டியது இல்லை உச்சநீதிமன்ற உத்தரவிட்டதை மீறாமல் கேரள அரசு கடைபிடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற உத்தரவை காற்றிலே பறக்க விட்டு விட்டு மீண்டும் சுற்றுச்சூழல் துறை என்று சொல்லி அதற்கு ஒரு நிபுணர் குழு என்று சொல்லி மீண்டும் ஜீரோவிலிருந்து தொடங்குகிற ஒரு நிலைமை எப்படி ஏற்பட்டது உச்ச நீதிமன்றம் மிகத் தெளிவாக எட்டு கட்ட ஆய்வுக்கு பிறகு முல்லை பெரியாறு அணை வலிமையாக இருக்கிறது பாதுகாப்பாக இருக்கிறது.

இன்னும் பல நூறு ஆண்டுகள் இது மிகவும் பாதுகாப்பானது என்பதை தெள்ளத் தெளிவாக நிபுணர்கள் குழுவோடு தெரிவித்துள்ள்ளார்கள்.தீர்வு காண்பதற்கு ஜெயலலிதா உச்சநீதிமன்றத்திலே நமக்கு தீர்ப்பை பெற்றுக் கொடுத்தார்கள்.

அதற்கு நன்றி தெரிவித்து இதே மதுரையில் மாநாடு நடத்தினார்கள். ஒட்டுமொத்த விவசாயிகள் பங்கேற்றும் நடத்திக் காட்டினார்கள்.இன்றைக்கு தமிழன் உரிமை எங்கே போனது என்று கேட்கிற ஒரு சூழ்நிலையில் திமுக அரசு மவுனம் சாதிப்பது நமக்கு வேதனையாக இருக்கிறது . கேரளா அரசின் செயலுக்கு இப்போதுதான் கடிதம் எழுதியிருக்கிறார்.

இது எப்படி உள்ளது என்றால் குதிரை லாயத்திலிருந்து குதிரை வெளியேறிய பின்பு லாயத்திற்கு பூட்டு போடுவது அது எவ்வளவு முட்டாள்தனமான செயலோ அதேபோன்றுதான் உள்ளது.

ஜனவரி மாதமே அணைகட்ட கேரளா அரசு பரிந்துரை கடிதம் கொடுத்து சுற்றுச்சூழல் மையம் அதை ஏற்றுக்கொண்டு மத்திய அரசின் நிபுணர் குழு உத்தரவு பிறப்பித்த பிறகு கடிதம் எழுதுகிறார். குதிரை முல்லைப் பெரியாறு அணைக்கே ஓடிவிட்டது.இப்போது கடிதம் எழுதுவது என்று சொன்னால் இது போன்ற ஒரு செயலை மக்கள் வன்மையாக கண்டிக்கிறார்கள்.

இது தொடர்பாக எடப்பாடி அவர்கள் கடுமையான கண்டனத்தை தெரிவித்து இருக்கிறார். இது போன்ற நிலையை திமுக அரசு தொடருமானால் எடப்பாடி யாரை நேரில் அழைத்து வந்து அவருடைய தலைமையில் எங்கள் ஐந்து மாவட்ட விவசாயிகளுடைய வாழ்வாதார ஜீவாதாரத்தை காப்பாற்றுவதற்கு அம்மாவின் வழியிலே எந்த அறப்போராட்டத்திற்கும் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தயங்காது என்பதை நான் தெள்ளத்தெளிவாக தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் .

தொடர்ந்து இந்துத்துவா கொள்கையை ஜெயலலிதா ஆதரித்தார் என பாஜக தலைவர் அண்ணாமலை பேசிய நிலையில்

முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனும் அதே கருத்து வலியுறுத்தி பேசியிருப்பது குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு?? பதில் அளித்த முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார், அவர்கள் தலைவரைப் பற்றி கொள்கையைபற்றி பேசுவதில் எங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை. ஜெயலலிதாவின் சமூக நீதிக் கொள்கை பெண்ணுரிமை கொள்கை மாணவ மாணவியர் சமுதாயத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்த எல்லாவற்றையும் மூடி மறைத்து விட்டு உள்நோக்கத்தோடு அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு அவர்கள் சொல்வதனால் எந்த தாக்கமும் தமிழகத்தில் ஏற்படாது. எங்கள் கொள்கை கோட்பாடுகளை அவர்கள் விளக்கம் சொல்லித்தான் தமிழக அரசு மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை .

அவர்கள் தங்களை அடையாளப்படுத்துவதற்காகவும் தங்களுக்கு முகவரி தேடுவதற்காகவும் தேசத்திற்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்த ஜெயலலிதாவை துணைக்கு அழைத்துக் கொள்வதில் உள்நோக்கம் இருக்கிறது அரசியல் சூழ்ச்சி இருக்கிறது .

இந்துத்துவா என்பது தனி விவாதம் ஆனது அவர்கள் விவாதத்திற்கு அழைக்கிறார்கள் அதற்கு எடப்பாடி யார் அவர்கள் விரிவாக தெளிவாக ஏற்கனவே கூறியிருக்கிறார்கள் ஜெயலலிதா சமுத்திரத்தின் வடிவம் முகவரி விலாசம் அவர் எல்லோருக்கும் சொந்தமானவர் என்பதை முன்னாள் அமைச்சர்கள் சொல்லி இருக்கிறார்கள் உங்களுக்கு தைரியம் இருந்தால் வீரம் இருந்தால் நீங்கள் உங்கள் தலைவர்களை சொல்லி உங்கள் செல்வாக்கை சொல்லி உங்கள் கொள்கைகளை சொல்லி உங்கள் லட்சியங்களை சொல்லி உங்களது முன்னாள் தலைவர்கள் இந்நாள் தலைவர்களை சொல்லி இந்த தமிழ்நாட்டு மக்களுடைய நம்பிக்கையை பெற முயற்சி எடுங்கள்.

மக்கள் எதிர்காலத்தில்,இந்த காலத்தில் எந்த காலத்திலும் ஆதரவுகொடுக்க மாட்டார்கள் என்று தெரிந்த பிறகுதான் உங்களுடைய கொள்கைகள் கோட்பாடுகள் சித்தாந்தங்கள் தமிழகத்தில் எடுபடாது மக்களிடத்திலே வரவேற்பு இல்லை மக்களிடத்தில் நம்பிக்கை இல்லை என்று நீங்கள் முடிவு எடுத்த காரணத்தினால் இன்று அதிமுகவை வளர்த்தெடுத்த ஜெயலலிதாவை இன்றைக்கு புகழ்வது போல் புகழ்ந்து வஞ்சப்புகழ்ச்சி அணியாக உங்களுக்கு அடையாளத்தை ஏற்படுத்திக்கொள்ள துணைக்கு அழைப்பது போல் நீங்கள் பேசுவதை மக்கள், அதிமுகதொண்டர்கள்,பாஜக தொண்டர்கள் கூட ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். எம்ஜிஆர் ஜெயலலிதாவின் மறுவடிமாக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி சேவை செய்து வருகிறார் அதில் அண்ணாமலைக்கு எள்ளளவும் சந்தேகம் வேண்டாம் அச்சம் வேண்டாம் என்றார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி

மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…

19 hours ago

உண்மையிலே அதிமுகவை பாராட்டியே ஆகணும்… திருமாவளவன் திடீர் டுவிஸ்ட்!

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…

19 hours ago

டிராகன் படத்துக்கு போனேன், கடுப்பேத்திட்டாங்க- ஆதங்கத்தை கொட்டிய நடிகர் ஸ்ரீகாந்த்…

மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…

20 hours ago

உடலுறவு என்பது மகிழ்ச்சிக்காக.. குழந்தை பெற்றுக்கொள்ள அல்ல : பிரபல நடிகை அதிரடி கருத்து!

அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…

20 hours ago

வக்பு மசோதாவுக்கு கனிமொழி, திருச்சி சிவா மறைமுக ஆதரவு? தம்பிதுரை எம்பி பரபரப்பு குற்றச்சாட்டு!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…

21 hours ago

பழைய மதுரையை உண்மையில் உருவாக்கி வரும் சிவகார்த்திகேயன் படக்குழு? அடேங்கப்பா!

பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…

22 hours ago

This website uses cookies.