மாட்டிறைச்சி சாப்பிடுவயா? புர்காவால் ஷூவை துடைக்க வைத்த ஆசிரியர்கள் : அரசு பள்ளி மாணவிக்கு நேர்ந்த கொடுமை!!!

Author: Udayachandran RadhaKrishnan
22 November 2023, 11:16 am

மாட்டிறைச்சி சாப்பிடுவயா? புர்காவால் ஷூவை துடைக்க வைத்த ஆசிரியர்கள் : அரசு பள்ளி மாணவிக்கு நேர்ந்த கொடுமை!!!

கோவை துடியலூர் பகுதியில் உள்ள என்.ஜி.ஜி.ஓ காலனி அசோகபுரம் அரசுப் பள்ளியில் முக்தர் என்பவரின் மகள் படித்து வருகிறார். இவரிடம் ஆசிரியர்கள் அபிநயா என்பவரும், ராஜ்குமார் என்பவரும் மாட்டுக்கறி சாப்பிடுவியா நீ , அப்ப உனக்கு திமிர் அதிகமாக தான் இருக்கும் எனக் கூறி மாணவி அணிந்திருந்த புர்கா மூலம் ஷூவை துடைக்க வைத்ததாக மாணவியின் பெற்றொர் தரப்பில் புகார் தெரிவிக்கப்படுகிறது.

ஆசிரியர் ராஜ்குமார், மாணவியை வாடி போடி என அழைத்ததுடன் 2 மாதமாக மிரட்டி வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து பெற்றோர் தரப்பில் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்த போது, இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை, நான் பார்த்துக் கொள்கிறேன், நீங்க புறப்படுங்க என பதில் அளித்ததாகவும் ஆனாலும் சம்ப்ந்தப்பட்ட அந்த 2 ஆசிரியர்களையும் அழைத்து தலைமை ஆசிரியர் கண்டிக்கவே இல்லை எனக் கூறியும் போலீஸ் நிலையத்திற்கு சென்றுள்ளார்கள் மாணவியின் பெற்றோர்.
இதையடுத்து மாணவிக்கும், பெற்றொருக்கும் தைரியம் அளித்த காவல்துறையினர் நீங்க எப்போதும் போல் பிள்ளையை பள்ளிக்கு அனுப்பி வைங்க, ஏதாவது பிரச்சனை வந்தால் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் எனச் சொல்லியிருக்கிறார்கள்.

அதன் பேரில் முக்தர் தனது மகளை மீண்டும் பள்ளிக்கு அனுப்பிய நிலையில், தீபாவளி முடிந்து 2 நாட்களில் மீண்டும் அபிநயா, ராஜ்குமார் ஆகிய 2 ஆசிரியர்களும் மாட்டுக்கறி சாப்பிடுவதை எல்லோர் முன்னிலையிலும் சுட்டிக்காட்டி தகாத வார்த்தைகளில் திட்டியதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த விவகாரத்தில் நியாயம் வேண்டி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்துக்கு சென்ற மாணவியின் பெற்றோர், பள்ளியில் தங்கள் மகளுக்கு என்னவெல்லாம் நடந்தது என்பது பற்றி மனு அளித்துள்ளனர். இந்த தகவல் பள்ளிக்கல்வித்துறைக்கும் சென்றுள்ளதால் இனி என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!