போராட்டம் செய்ய தூண்டி விடறீங்களா? முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அன்புமணி எச்சரிக்கை!!!

Author: Udayachandran RadhaKrishnan
17 September 2023, 2:16 pm

போராட்டம் செய்ய தூண்டி விடறீங்களா? முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அன்புமணி எச்சரிக்கை!!!

தந்தை பெரியார் பிறந்த தினத்தை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில், பாமாக நிறுவனர் இராமதாஸ் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் பெரியார் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதன் பின்னர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில்..உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி வன்னியர்களுக்கு 10.5, சதவீதம உள் ஒதுக்கீடு செய்ய தரவுகளை கடந்த ஒன்றை ஆண்டு காலமாக தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது, வழங்குவார்கள் என காத்துக் கொண்டிருக்கிறோம், பொறுத்துக் கொண்டிருக்கிறோம், அடுத்த கட்டம் போராட்டம் செய்ய தூண்டி விடாதீர்கள் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை

எங்கள் உரிமையை கேட்கிறோம் சமூக நீதிப் நீதிக்காக கேட்கிறோம், உலக அளவில் போற்றக்கூடிய தந்தை பெரியார் அவர்களின் பிறந்த தினத்தில் கேட்கிறோம், பெரியார் அவர்களால் தான் ஓரளவு ஒடுக்கப்பட்ட பின் தங்கிய மக்களுக்கான சமூகநீதி கிடைத்திருக்கிறது, ஆனால் தந்தை பெரியார் அவர்களின் கனவு இன்னும் நினைவாகவில்லை.

பாட்டாளி மக்கள் கட்சி மட்டும் தான் தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகளை முழுமையாக கடைப்பிடித்து வருகிறது, தந்தை பெரியார் அவர்களின் கனவை நினைவாக்க வேண்டுமென்றால் வேண்டுமென்றால் பாட்டாளி மக்கள் கட்சியால் மட்டும் தான் முடியும், பாட்டாளி மக்கள் கட்சிக்கு அதிகாரம் தந்தால் தந்தை பெரியார் அவர்களின் கனவை நினைவாக்குவோம் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்

  • ajith kumar asking for script to bala but bala did not give Full Script கொடுக்க மாட்டேன்- அஜித்தின் முகத்துக்கு நேராக சொன்ன பிரபல இயக்குனர்…