ஊட்டி போற பிளான் இருக்கா? அப்போ ரயில் பயணத்தை மறந்திருங்க : சுற்றுலா பயணிகள் கவனத்திற்கு!

Author: Udayachandran RadhaKrishnan
18 May 2024, 10:42 am

ஊட்டி போற பிளான் இருக்கா? அப்போ ரயில் பயணத்தை மறந்திருங்க : சுற்றுலா பயணிகள் கவனத்திற்கு!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை வரை நீலகிரி மலை ரயில் சேவை தினசரி நடைபெற்று வருகிறது இந்த மலை ரயிலில் பயணம் செய்ய உள்நாடு மற்றும் வெளிநாட்டு பயணிகள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் ஒரு சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது இதனால் கல்லாறு மற்றும் ஹில் குரோவ் ரயில் நிலையங்களுக்கிடையே தண்டவாளத்தில் மண் மற்றும் பாறைகள் சரிந்துமலை ரயில் சேவை பாதிப்படைந்துள்ளது.

இதை அடுத்து மலை ரயில் சேவை இன்று ஒரு நாள் ரத்து செய்யப்படுவதாக சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

தண்டவாளத்தின் சீரமைப்பு பணிகள் முடிவடைந்த உடன் வழக்கம்போல மலை ரயில் சேவை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க: புதுப்புரளியா இருக்கு.. என்ன பிரதமரே தோல்வி பயமா? விடியல் பயணம் மீது வீண்பழியா? CM ஸ்டாலின் கண்டனம்!

பயணிகளிடம் பெறப்பட்ட கட்டணங்கள் திருப்பி அளிக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. மூன்று மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்து காத்திருந்து ஆர்வத்துடன் சென்ற சுற்றுலாப் பயணிகள் மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதால் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!