உனக்கு அறிவு இருக்கா? எந்த இடத்தில் என்ன கேள்வி கேக்கற? நிருபர்களிடம் கொந்தளித்த நடிகர் ஜீவா!
Author: Udayachandran RadhaKrishnan1 September 2024, 4:12 pm
தேனி மாவட்டத்தில் தேனி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக தேனி சாரல் என்ற ஜவுளிக்கடை திறப்பு விழாவிற்காக நடிகர் ஜீவா வருகை புரிந்து ரிப்பன் வேட்டி குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.
அவர் அனைத்து ஆடைகளின் பார்த்து பின் செய்தியாளரை சந்தித்த ஜீவா செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்காமல் செய்தியாளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அறிவு இருக்கிறதா? என்ன கோபத்துடன் பத்திரிக்கையாளரிடம் கொந்தளித்த நடிகர் ஜீவா. மலையாள சினிமா ஹேமா கமிட்டி தொடர்பாக பத்திரிக்கையாளர்கள் கேள்வி கேட்டவுடன் நிலையில் தனக்கு இந்த சம்பவம் பற்றி எதுவுமே தெரியாது.
எனக் கூறிய நடிகர் ஜீவா தொடர்ந்து பத்திரிக்கையாளர் கேள்வி கேட்கவே கேள்வி கேட்ட பத்திரிக்கையாளரை பார்த்து உனக்கு அறிவு இருக்கா?
எந்த இடத்தில வந்து இந்த மாதிரி கேள்வி கேட்கிறாய் என்று கோபத்துடன் திட்டியவாறு சென்றார். இதனால் பத்திரிக்கையாளர்களுக்கு நடிகர் ஜீவா வாக்குவாகம் ஏற்பட்டது