தனியா போட்டியிட தைரியம் இருக்கா? நாங்க தயார்.. மோதிப் பார்க்கலாமா? திமுகவுக்கு எஸ்பி வேலுமணி சவால்!!

Author: Udayachandran RadhaKrishnan
5 January 2023, 2:27 pm

கூட்டணி கட்சியை எப்போதும் அதிமுக அனுசரித்தே செல்லும்..அதை நாடாளுமன்ற தேர்தலில் நீங்கள் பார்ப்பீர்கள் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

சொத்து வரி உயர்வு, மின் கட்டணம், பால் விலை உயர்வு மற்றும் விலைவாசி உயர்வால் பொதுமக்கள் பாதிக்கபடுவதாக கூறியும், இந்த விலைவாசிக்கு காரணம் திமுக அரசு தான் என கூறி கோவை தொண்டாமுத்தூர் தொகுதிகுட்பட்ட மாதம்பட்டியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அப்போது ஆர்ப்பாட்டத்தில் பேசிய எஸ்.பி.வேலுமணி, 2 வருட திமுக ஆட்சியில் விளம்பரம் மட்டுமே செய்து கொண்டிருப்பதாகவும், மக்களுக்கு ஏதும் செய்யாத அரசாக இந்த அரசு உள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

2 வருட ஆட்சியில் திமுக அரசு செய்த ஒரே சாதனை, அதிமுக ஆட்சியில் போடபட்ட அத்தனை டெண்டர் ஒப்பந்தங்களையும் ரத்து செய்ததுதான் என பேசிய அவர், நீட் தேர்வு ரத்து செய்வோம் என்று சொல்லி பல்வேறு நாடகங்களை திமுக அரசு அரங்கேற்றியதாகவும் அவர் தெரிவித்தார்.

எடப்பாடி பழனிச்சாமி அறிக்கையின் காரணமாகவே பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு கொடுக்கப்பட்டதாக தெரிவித்த அவர்,
எதிர்கட்சியாக திமுக இருக்கும் போது ஊர் முழுவதும் பெட்டி எடுத்து சென்று மனு வாங்கினார் ஸ்டாலின். அந்த மனுவெல்லாம் என்னாச்சு என்று தெரியவில்லை எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

அதேபோல் முதல்வர் ஸ்டாலின் கோவை மாவட்டத்தை தொடர்ந்து புறக்கணிப்பதாக குற்றம்சாட்டிய அவர், கோவையில் உள்ள அனைத்து அலுவலகத்திலும் திமுகவினர் பணம் வசூலிப்பதாகவும், கையாளகாத, ஒன்று தெரியாத முதல்வராக ஸ்டாலின் உள்ளார் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

அரசு ஊழியர்கள் கூட திமுக அரசை வெறுப்பதாக தெரிவித்த அவர்,
ஓட்டு போடுகிற மின்னனு இயந்திரத்தில் தில்லு ,முல்லு செய்துதான் உள்ளாட்சி தேர்தலில் அதிக இடத்தில் திமுக வெற்றி பெற்றதாக தெரிவித்த அவர், திமுக கூட்டணி கட்சிகள், திமுக அரசுக்கு எதிராக ஏதுவும் பேசமால் அடிமையாகி இருப்பதாகவும், ஆனால் நாங்கள் யாருக்கும் அடிமையில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

நாடாளுமன்ற தேர்தலில் முழு வெற்றி அதிமுகவுக்கு தான் அதுவும்
சட்டமன்ற தேர்தலும் நாடாளுமன்ற தேர்தலோடு வந்தாலும் நமக்கு தான் முழு வெற்றி என்று குறிப்பிட்ட பேசிய அவர், இலவசமாக பெண்களுக்கு பேருந்து என்று சொல்லி பல்வேறு பேருந்துகளை நிறுத்தி விட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி.வேலுமணி, பாமகவின் கூட்டணி தொடர்பான குற்றசாட்டுக்கு எடப்பாடி பழனிச்சாமி பதிலளிப்பார் என்றும் யாரையும் துன்பறுத்தி பேச வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு இல்லை என தெரிவித்த அவர், எல்லோரும் சொல்கிறார்கள் அதிமுக பிளவுபட்டு விட்டது என்று, ஆனால்
எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக வழுவாக உள்ளதாகவும்
தமிழகத்திலே மிகப்பெரிய கட்சி திமுக கிடையாது, அதிமுக தான் எனவும் அவர் தெரிவித்தார்.

தைரியாகமாக இருந்தால் திமுக தனித்து நிற்கட்டும் நாங்களும் தனித்து நிற்கிறோம்..யார் வெற்றி பெறுவோம் என்று பார்கலாம். என சவால் விடுத்த எஸ்.பி. வேலுமணி , எங்களுக்கு இணையாண கட்சி ஏதுமில்லை எனவும் கூட்டணி கட்சியை எப்போதும் அதிமுக அனுசரித்தே செல்லும், அதை நாடாளுமன்ற தேர்தலில் நீங்கள் பார்ப்பீர்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?