தமிழ்நாட்டில் அதிக வாக்காளர்கள் கொண்ட தொகுதி எது தெரியுமா? அட கோவையில் இந்த தொகுதியும் இருக்கா? வெளியான லிஸ்ட்!

Author: Udayachandran RadhaKrishnan
22 January 2024, 3:47 pm

தமிழ்நாட்டில் அதிக வாக்காளர்கள் கொண்ட தொகுதி எது தெரியுமா? அட கோவையில் இந்த தொகுதியும் இருக்கா? வெளியான லிஸ்ட்!

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை ஆரம்பித்து தீவிரமாக இறங்கியுள்ளன.

அதே போல தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் முன்னெடுத்துள்ளது. தமிழ்நாட்டிற்கான இறுதி வாக்காளர் பட்டியலும் தயார் நிலையில் உள்ளது.

அதன்படி தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு வெளியிட்டுள்ள பட்டியலில் மொத்தம் 6.11 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இன்று சென்னை தலைமை செயலகத்தில் ஒருங்கிணைந்த இறுதி வாக்காளர் பட்டியலை சத்யபிரதா சாகு வெளியிட்டுள்ளார்.

தமிழ்நட்டில் உள்ள மொத்த வாக்காளர் எண்ணிக்கை 6,18,90,348. அதில் பெண் வாக்காளர்கள் 3,14,85,724. அதே போல ஆண் வாக்காளர்கள் 3,03,96,330.

இந்த முறையும் பெண் வாக்காளர்களே அதிகம் உள்ளனர். தமிழ்நாட்டில் அதிக வாக்காளர்கள் கொண்ட சட்டமன்ற தொகுதியாக சோழிங்கநல்லூர் முதலிடத்திலும், கோவை கவுண்டம்பாளையம் தொகுதி 2வது இடத்திலும் உள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 344

    0

    0